ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

காலம் கடத்தாதே!

காலம் கடந்திடக் கூடாது கடமை முடித்திடு கருத்தாக! நாளும் போக்கிடக் கூடாது நன்மைகள் செய்திடு கனிவாக! ஆழம் காணாக் கடலுள்ளே ஆஹா எத்தனை பேரமைதி! ஆலும் வேலும் போலிருந்தால் அடடா அதுதான் பேருறுதி! ஆழக்கடலும்

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:54 pm

காலம் கடந்திடக் கூடாது

கடமை முடித்திடு கருத்தாக!

நாளும் போக்கிடக் கூடாது

நன்மைகள் செய்திடு கனிவாக!

ஆழம் காணாக் கடலுள்ளே

ஆஹா எத்தனை பேரமைதி!

ஆலும் வேலும் போலிருந்தால்

அடடா அதுதான் பேருறுதி!

ஆழக்கடலும் ஆலும் வேலுமாய்

அறிவைப் பெருக்கிட வேண்டாமா!

அதனால் வாழ்வில் கரை சேர

ஆவல் கொண்டிட வேண்டாமா?

ஞாலம் மூடிய மடைமைகளை

ஞானத் தினாலே நீக்கிவிடு!

நல்லதைச் செய்திடும் திறத்தாலே

நன்மைகள் பலவே ஆக்கிவிடு!

சீலம் உயர்ந்திடப் பாடுபடு

சீரும் சிறப்பும் நீ அடைவாய்!

காலம் கடந்திடக் கூடாது

கடமை முடித்திடு கருத்தாக!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.