
கண்கள் இரண்டும் விளக்காக
கல்வியைக் கற்றிட வேண்டாமா?
கல்லா மனிதன் கல்லென்ற
கருத்தை மாற்றிட வேண்டாமா?
இன்னும் எதற்கோ அறியாமை
இன்றே போக்கிட வேண்டாமா?
இருப்போர்-இல்லார் எல்லாமே
இனிதாய் படித்திட வேண்டாமா?
பொன்னும் பொருளும் இருந்தாலும்
எண்ணும் எழுத்தே கண்ணாகும்!
பொறுப்பாய் உணர்ந்து படிக்காவிட்டால்
பிறந்த வாழ்வே புண்ணாகும்!
பண்பும் அறிவும் படிப்பால் பெருகும்
பாமரம் இனிமேல் வேண்டாமே!
பள்ளிகள், கல்வியை அரசும் தருதே
படித்திடவே நீ தவறாதே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.