தெரிந்து கொள்ளுங்கள்...

ஒலிம்பிக் ஒலிம்பிக்... 1. நவீன ஒலிம்பிக் போட்டி தொடங்கப்பட்ட ஆண்டு - 1896 (ஏதென்ஸ்). 2. நவீன ஒலிம்பிக்கின் தந்தை என்று அழைக்கப்படுபவர் - பியரி டி குபர்டின் (இத்தாலி). 3. முதல் ஒலிம்பிக் போட்டி நடந்த வ
தெரிந்து கொள்ளுங்கள்...
Updated on
2 min read

ஒலிம்பிக் ஒலிம்பிக்...

1. நவீன ஒலிம்பிக் போட்டி தொடங்கப்பட்ட ஆண்டு

- 1896 (ஏதென்ஸ்).

2. நவீன ஒலிம்பிக்கின் தந்தை என்று அழைக்கப்படுபவர்

- பியரி டி குபர்டின் (இத்தாலி).

3. முதல் ஒலிம்பிக் போட்டி நடந்த விளையாட்டு மைதானம்

- பெனாதினைகோ (ஏதென்ஸ்).

4. ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்ட ஆண்டு - 1936 (பெர்லின்).

5. ஒலிம்பிக் கொடி ஏற்றப்பட்ட ஆண்டு - 1920 (பெல்ஜியம்).

6. இந்தியா முதன்முதலில்

ஒலிம்பிக் போட்டிகளில்

கலந்து கொண்ட ஆண்டு

- 1900.

7. ஒலிம்பிக்கில் இந்தியா முதன்முதலில் தங்கப்பதக்கம் பெற்ற விளையாட்டு - ஹாக்கி (1928).

8. இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றது

எட்டு முறை.

9. இதுவரை நடந்துள்ள

ஒலிம்பிக் போட்டிகள்

- 30 (1896 முதல் 2008 வரை).

10. இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெறும் நகரம் - லண்டன் (இங்கிலாந்து).

தொகுப்பு: ரா.வீரபாண்டியன், புதுக்கோட்டை.

பத்து கேள்விகள் - பதில் ஒன்று!

1. இரு கைகளாலும் எழுதும்

ஆற்றல் படைத்தவர்?

2. இவர் விமானத்தில் பயணம் செய்ததே இல்லை!

3. இவருக்கு திருக்குறளை

அறிமுகப்படுத்தியவர்

தில்லையாடி வள்ளியம்மை.

4. அதிகமான நாடுகளின் அஞ்சல் தலைகளில் இடம் பெற்றவர்.

5. இவரது குடும்பத்துடன்

திருமண உறவு வைத்துக் கொண்டவர் ராஜாஜி.

6. "யங் இந்தியா' என்ற

பத்திரிகையை நடத்தியவர்.

7. இவரது அரசியல் குரு - கோகலே.

8. ஆகஸ்ட் புரட்சிக்கு

இவர் செய்த முழக்கம்

- "செய் அல்லது செத்து மடி'.

9. இவரை தேசப்பிதா என

முதலில் அழைத்தவர் - நேதாஜி.

10. இவரது கடைசி வார்த்தை - "ஹே ராம்.'

விடை: மகாத்மா காந்தி.

- தொகுப்பு: ஆ.திலீபன் கணேஷ், திருநெல்வேலி.

துளித் துளிச்

செய்திகள்...

1. முயலைப் போலவே குழிக்குள் சுருண்டு படுத்துத் தூங்கும் பறவை நியூசிலாந்திலுள்ள

கிவி பறவை.

2. பூனைக்கு மொத்தம் 30 பற்கள் உள்ளன.

3. வண்ணத்துப் பூச்சிகளால் கடிக்க முடியாது. ஏனெனில் அவற்றுக்குத் தாடைகள் இல்லை.

4. மாமிசம் உண்ணும்

பிராணிகளில் மிகப் பெரியது அலாஸ்காவிலுள்ள கோடியாக் கரடிகள்.

5. குதிரைகளில் மிகச் சிறிய

இனத்துக்கு ஷெட்லாண்ட் என்று பெயர்.

-தொகுப்பு: எஸ்.சௌமியா,

தேவனாங்குறிச்சி.

ஒரு சொல் -

இரு பொருள்

1. ஒளித்து வைக்கச்

சொல்வதெப்படி? ஓதும் வேதத்தை அழைப்பதெப்படி? - மறை

2. அத்தனைச் சொற்களையும் கொண்டது என்ன?

ஆணவக்காரர்கள் கொள்வதும் என்ன? - அகராதி

3. வலக்காலுக்கு எதிர்ச்சொல் என்ன? வம்புக்காரன்

அடிபட்டது எதனால்?

- இடக்கால்

4. நீருள்ள கிண்ணத்தைக்

கவிழ்த்தால் நீர் ஆவதென்ன? கோபம் கொண்ட தேள்

செய்வதென்ன? - கொட்டும்

5. சிப்பியில் விளைவதென்ன? சின்னக்குழந்தை கன்னத்தில் அன்னை இடுவதென்ன?

- முத்து

6. வருமாறு அழைப்பதெப்படி? வருமானத்தைச்

சொல்வதெப்படி?

- வருவாய்

7. பழத்தை நறுக்கத் தேவை என்ன? தொலைவில்

செல்பவரை அழைப்பது

எப்படி? - கத்தி

8. மணி ஒலிப்பதெப்படி? சுவையை அறிவதெப்படி?

- நாவால்

9. காயம் ஆறியபின்

இருப்பதென்ன? மாம்பிஞ்சின் மறுபெயர் என்ன? - வடு

-தொகுப்பு: விசாகன்,

திருநெல்வேலி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com