

பேராசிரியர் ஒருவர் காந்திஜியைச் சந்திக்க ஆசிரமத்துக்கு வந்தார். அவர் அதற்கு முன்பு காந்திஜியை நேரில் பார்த்ததில்லை.
ஆசிரமத்துக்குள் நுழைந்தவர், ஒரு பெரியவர் அறையைப் பெருக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தார்.
""நான் மகாத்மாஜியைக் காண வந்திருப்பதாக, அவரிடம் போய் சொல்...'' என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
""ஐயா. காந்தி நேரப்படி நடப்பவர். தாங்கள் சற்றே காத்திருங்கள். 11 மணிக்கு நிச்சயம் காந்தி உங்களைச் சந்திப்பார்'' என்றார் அந்தப் பெரியவர்.
பேராசிரியருக்குக் கோபம் வந்துவிட்டது. காந்திஜியை மகாத்மாஜி என்கிறேன். இந்த மனிதரோ காந்தி என்று மரியாதைக்குறைவாக அவரைக் குறிப்பிடுகிறாரே என்ற கோபம் அவருக்கு.
மணி சரியாகப் பதினொன்று ஆனதும், பெருக்கி முடித்த பெரியவர், பேராசிரியரைப் பார்த்து, ""நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? நான்தான் காந்தி! உங்களுக்கு வேண்டியதைக் கேளுங்கள்...'' என்றார்.
பேராசிரியர் அதிர்ந்துபோய் விட்டார். காந்திஜியிடம் மன்னிப்புக் கோரினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.