

நாம் இன்று காணும் பறவைகள் பல கோடி ஆண்டுகளாக வானத்தில் பறந்து வருகின்றன. இதில் முக்கியமாக பறவையினம், பூச்சியினம் மற்றும் வெüவால்கள் அடங்கும். ஆனால் மனிதனும் ஏதேனும் கருவியைக் கண்டுபிடித்து வானத்தில் பறப்பது மிகவும் சமீபத்தில் ஏற்பட்டதே. இது சில முக்கியமான விஞ்ஞான தத்துவங்களின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது.
நாம் அன்றாடம் பறக்க வைக்கும் பட்டத்தில் ஆரம்பித்து முறையாக மிதவை வானூர்தி, ஆகாய கப்பல், ஹெலிகாப்டர், வாணிபத்தில் பயன்படுத்தப்படும் விமானங்கள் மற்றும் ஒலியைவிட வேகமாக பறக்கும் விமானம் என பலவிதமான கருவிகளை கண்டுபிடித்து பயன்படுத்தியும் வருகிறோம்.
ஒரு விமானம் பறக்கும்போது நான்கு விதமான விசைகள் அதன் மீது ஏற்படுகின்றன. இவை விமானத்தின் பளு, என்ஜின்கள் ஏற்படுத்தும் உந்து விசை, இறக்கைகளின் மீது வேகமாக காற்று பாய்வதால் ஏற்படும் தூக்கு விசை மற்றும் காற்றில் ஏற்படும் உராய்வு மற்றும் சலனத்தால் ஏற்படும் தடைவிசை ஆகும். என்ஜின் ஏற்படுத்தும் உந்து விசை விமானத்தின் பளு மற்றும் தடை விசையை எதிர்த்து முன்னேற வழி செய்கிறது.
ஒலியைவிட வேகமாக பறப்பதென்றால் மணிக்கு 1235 கி.மீ. வேகத்துக்கும் அதிகமாகும். இதனை மேக் என்றும் சொல்லுவர்.
ப்
ரைட் சகோதரர்களான ஆர்வில் மற்றும் வில்பர் உலகத்தில் முதன்முதலாக டிசம்பர் 17, 1903ம் ஆண்டு கட்டுப்பாட்டுடன் இயங்கும் விமானத்தை கண்டுபிடித்து சாதனை செய்தனர்.
ப்
விமானங்களில் ஒன்று, இரண்டு அல்லது நான்கு காற்றாடிகள் பயன்படுத்தப்பட்டன. இவை காற்றினுள் ஒரு திருகு போல வேலை செய்யும். ஆகவே காற்றழுத்தம் குறைந்தால் சிறப்பாக வேலை செய்யாது. 4000-6000 மீ. உயரத்துக்கு மேல் இவை பறக்க முடியாது. மேலும் வேகம் அதிகரிக்கும்போது இவை முந்தி செல்ல காற்றே தடையாக அமைந்தது. இந்த நிலையை சமாளிக்க ஜெட் விமானம் கண்டுபிடிக்கப்பட்டது. இவை 10,000-12,000 மீ. உயரத்தில் காற்றழுத்தம் குறைவான பகுதியில் பறக்கின்றன.
இதுவரை மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டு தற்சமயம் புழக்கத்திலுள்ள விமானங்களில் மிகப்பெரியது போயிங்-747 ஆகும். இதனைவிட பெரியது ஏர்பஸ் அ-380 ஆகும்.
போயிங்-747 ஜம்போ ஜெட் என்றும் அழைக்கப்படுகிறது. இதில் 600 பயணிகள் உட்கார்ந்து செல்ல முடியும். இதுவரை கிட்டத்தட்ட 2000-க்கும் மேற்பட்ட 747 விமானங்கள் விற்கப்பட்டுள்ளன.
இதுவரை எல்லா 747 விமானங்களும் சேர்ந்து 4200 கோடி கி.மீ. பயண தூரத்தைக் கடந்துள்ளன. இவற்றில் இதுவரை 350 கோடி மக்கள் பயணம் செய்துள்ளனர்.
இவ்விமானம் பறக்கும்போது மணிக்கு 290 கி.மீ. வேகமும் உச்சி வானத்தில் பறக்கும்போது மணிக்கு 910 கி.மீ. வேகத்துடனும் கீழே இறங்கும்போது மணிக்கு 260 கி.மீ. வேகமும் அடைகிறது. போயிங் 747 மணிக்கு 910 கி.மீ. வேகத்தில் பறக்கக்கூடியது. இதனை 0.85 மேக் என்றும் சொல்வர். ஒருமுறை எரிபொருள் நிரப்பிய பிறகு 13,000 முதல் 18,000 கி.மீ. வரை பறக்கவல்லது. ஒருமுறை எரிபொருள் நிரப்ப 2,40,370 லிட்டர் விமான டர்பைன் ஃயூயல் (அபஊ) தேவை.
கடந்த 35 ஆண்டுகளாக பெரிய விமானங்களில் ஒரே பெயராக இருந்தது போயிங்தான். இதற்கு சவால் விடும்படி தயாரிக்கப்பட்ட விமானம் இப்பொழுது ஏர்பஸ்-380 ஆகும்.
ஒரு போயிங் 747 விமானத்தில் கிட்டத்தட்ட 60 லட்சம் பாகங்கள் உள்ளன. இதில் 50 சதவீதம் (பாதிக்கு மேல்) ரிவட், போல்ட் மற்றும் இணைப்புக்காக பயன்படும் புரியாணிகள் ஆகும். இதைத்தவிர 274 கி.மீ. ஒயர்களும் 8 கி.மீ. நீளத்துக்கு குழாய்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. மொத்தமாக 66,150 கிலோகிராம் மிக அழுத்தமுள்ள அலுமினியம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனுடைய இரண்டு இறகுகளும் 43,090 கிலோ எடை உள்ளவை மற்றும் இதன் பரப்பளவு 525 சதுரமீட்டர் ஆகும்.
விமானம் கீழே இறங்குவதற்கும் மறுபடி பறந்து செல்லவும் 16 முக்கிய லேண்டிங் கியர்களும், இரண்டு மூக்கு லேண்டிங் கியர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்விமானத்தின் உயரமான பகுதி 19.4 மீ. உள்ள இதன் வால் புறமாகும். இது ஒரு ஆறு மாடிக்கட்டடத்துக்கு சமம். முதன் முதலில் ரைட் சகோதரர்கள் பறந்த தூரத்தை இந்த விமானத்தின் சிக்கன சீட்டு இடத்தில் அடக்க முடியும்.
தொகுப்பு : எஸ். கணேசன்,
இந்திய விவசாய ஆராய்ச்சி கழகம்,
பூஸô, புதுதில்லி - 110012.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.