
ஆசிரியையாகப் பணியைத் தொடங்கியபோது, சாலையின் ஓரமாகக் காலாற நடந்து சென்று கொண்டிருந்தார் அன்னை தெரசா.
வழியில், மூதாட்டி ஒருவர் முகத்தைத் துணியால் மூடியபடி சாலையின் ஓரம் படுத்திருந்தார். ஒரு கையால் பூனை ஒன்றுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.
அவரது முகத்தில் தொழுநோயின் ரணங்கள் கடுமையாக இருந்தன. கையில் விரல்கள் இல்லாதது போல இருந்தது. தெரசா, மனம் படபடக்க அவரிடம் விசாரித்தார்.
""உறவினர்கள் என்னை வெறுத்து விலக்கிவிட்டனர். என்னால் சமைக்க முடியவில்லை. யாரும் என்னுடன் பேசுவதில்லை. நான் பேசினால் விலகி ஓடுகிறார்கள். எச்சில் இலையில் கிடைக்கும் உணவை உண்கிறேன். இந்தப் பூனை மட்டுமே என்னுடன் இருக்கிறது!'' என்றார் அந்தப் பெண்.
கண்ணீர் விட்டார் அன்னை. அன்று மாலையிலேயே பள்ளி வளாகத்தில் தொழுநோய், காசநோயால் துன்பப்படுபவர்களுக்காக மருந்தகம் ஒன்றைத் திறந்தார் அன்னை தெரசா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.