

மஞ்சள் வெயில் ஒளிர்கின்ற
மாலைப் பொழுது அழகு
உரு மாற்றம் கொள்கின்ற
கரு மேகம் அழகு
செந்தீ யாய்ச் சிவக்கின்ற
அந்தி வானம் அழகு
முந்திக் கொண்டு பூக்கின்ற
விண் மீன்கள் அழகு
பூச்சரம் போல் பறக்கின்ற
புள்ளி னங்கள் அழகு
மாலை வேளை மலருகின்ற
முல்லை மலர் அழகு
சாயங் காலம் கூடுகின்ற
சந்தைக் கூட்டம் அழகு
மேயச் சென்று திரும்புகின்ற
மந்தை காண அழகு
இரவு பகலை இணைக்கின்ற
உறவு மாலை அழகு
பிரிந்து சென்ற யாவரையும்
பிணைக்கும் மாலை அழகு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.