
ராமகிருஷ்ண பரமஹம்சரின் மடத்தில் ஒரு விழா நடக்க இருந்தது. அதற்காக நிறைய லட்டுகள் தயாரித்து வைத்திருந்தனர். அவற்றை எறும்புகளிடமிருந்து பாதுகாக்க என்ன செய்யலாம் என்று ராமகிருஷ்ணரிடம் யோசனை கேட்டனர்.
அவரோ, லட்டு இருக்கும் பாத்திரத்தைச் சுற்றிச் சர்க்கரையால் ஒரு வட்டம் போட்டார். இரவில் வந்த எறும்புகள் சர்க்கரையை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டன. அவை லட்டு இருந்த பாத்திரத்தின் அருகே கூட செல்லவில்லை.
காலையில் இதைப் பார்த்தவர்கள் ராமகிருஷ்ணரிடம் கூறினர்.
அவர் சொன்னார்: ""இந்த எறும்புகள் முன்னேறிச் சென்றிருந்தால் இவற்றுக்கு லட்டுகளே கிடைத்திருக்கும். இந்த எறும்புகளைப் போலத்தான் மனிதர்கள் பலரும் உள்ளனர். சிறு வெற்றியே போதும் எனப் பெரும் வெற்றியைக் கோட்டை விட்டுவிடுகின்றனர்!''
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.