விடுகதைகள்

ஒப்பனை செய்யாத தங்க மேனியாள் வானம் இருண்டால் உல்லாச நடனமிடுவாள். அவள் யார்? (மயில்) உருவமில்லா கல்; உனக்குள் எனக்குள் உண்டாகும் கல் அதிர்ச்சியில் மறையும் கல்; அந்தக் கல் என்ன கல்? (விக்கல்) சூரியன் பா
விடுகதைகள்
Published on
Updated on
1 min read

ஒப்பனை செய்யாத தங்க மேனியாள் வானம்

இருண்டால் உல்லாச நடனமிடுவாள். அவள் யார்?

(மயில்)

உருவமில்லா கல்; உனக்குள் எனக்குள் உண்டாகும் கல் அதிர்ச்சியில் மறையும் கல்; அந்தக் கல் என்ன கல்?

(விக்கல்)

சூரியன் பார்க்காத கிணற்றுக்குள்ளே சுவையான தண்ணீர். அது என்ன?

(தேங்காய்)

பிடி இல்லா குடை; பிரமிக்க வைக்கும் குடை மடிக்கமுடியா குடை; மக்கள் செய்யா குடை. அது என்ன?

(வானம்)

மாலையில் பூத்து காலையில் மறையும் பூவல்ல;

உலகுக்கெல்லாம் ஒளி கொடுக்கும். விளக்கல்ல. அது என்ன?

(நிலவு)

மாரியில்லை மழையுமில்லை - பச்சையானது.

பூவுமில்லை காயுமில்லை - பழம் பழுக்குது. அது என்ன?

(பச்சைக்கிளி)

கமண்டலம் இல்லாமல் தவமிருப்பான் தூண்டில் இல்லாமல் மீன் பிடிப்பான். அவன் யார்?

(கொக்கு)

மறைந்திருந்தே பேசுவான்; அவன் பேச மறந்தால்

நாம் இல்லை. அவன் யார்?

(இதயம்)

பச்சைப் பெட்டிக்குள் தங்கக் கம்பிகள்.

வெட்டி எடுத்தால் ஊரே மணக்கும். அது என்ன?

(பலாப்பழம்)

சங்கீதம் பாடிக் கொண்டே சந்தோஷமாகச்

செல்வாள் வளைந்து நெளிந்து ஓடி வையகத்தைச் செழிக்கச் செய்வாள். அவள் யார்?

(நதி)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com