புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

குழந்தைப் பாடல்: வாழை

 தண்டும் காயும் இலையும் பூவும்  தந்து நம்மைக் காக்குமே  உண்டு மகிழ இனிக்கும் கனியை  உவகை யோடு வழங்குமே    வெட்டி வெட்டிச் சாய்த்த போதும்  வேரில் கன்றை ஈனுமே  நட்டு வளர்த்த மனிதர் தமக்கு  நன்றி யினைச்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:08 am

நா. இராதாகிருட்டிணன்

 தண்டும் காயும் இலையும் பூவும்

 தந்து நம்மைக் காக்குமே

 உண்டு மகிழ இனிக்கும் கனியை

 உவகை யோடு வழங்குமே

 வெட்டி வெட்டிச் சாய்த்த போதும்

 வேரில் கன்றை ஈனுமே

 நட்டு வளர்த்த மனிதர் தமக்கு

 நன்றி யினைச் சொல்லுமே

 உறுப்பு தானம் வழங்கும் முறையை

 உலகில் முதலில் சொன்னது

 பொறுப்பாய் இதனை மனிதர் தாமும்

 புரிந்து கொண்டால் நல்லது

 ஏழை எளியோர் மேலோர் கீழோர்

 வாழை பார்ப்ப தில்லையே

 தாழ்வு உயர்வு பார்ப்போர் வாழ்வில்

 தீரா தென்றும் தொல்லையே

 வாழ்வில் வேண்டும் எளிமை என்று

 வாழை நமக்குக் காட்டுமே

 வாழை போல நீயும் வாழ்ந்தால்

 வாழ்த்தும் உன்னை உலகமே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.