

ஒரு போரில் நெப்போலியனின் படை சிறிய பாலம் ஒன்றின் அருகில் இருந்தது. பாலத்தின் மறுபுறத்தில் எதிரியின் மாபெரும் படை இருந்தது.
முதல் நாள் போரில் வீரர்களை உற்சாகப்படுத்திய நெப்போலியன், ""நாம் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும் போர் செய்து வெற்றி பெற வேண்டும்'' என்று கூறி அனுப்பினார்.
மாபொரும் படையை எதிர்த்துப் போரிட முடியாமல் நெப்போலியனின் வீரர்கள் அந்தப் பாலத்தின் வழியே திரும்பி ஓடி வந்துவிட்டார்கள். இரண்டாவது நாளும் இதே போல நடந்தது.
மூன்றாம் நாள் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று வீரர்களை அனுப்பிய நெப்போலியன், தனது வீரர்கள் அந்தப் பாலத்தைக் கடந்ததும் குண்டு வீசிப் பாலத்தைத் தகர்த்துவிட்டார்.
இதனால் வீரர்கள் திருப்பி வருவதற்குப் பாலம் இல்லாமல் போய்விட்ட நிலையில் எப்படியும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற வேகத்தில் போரிட்டு எதிரியின் மாபெரும் படையைத் தோற்கடித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.