
வருகை தரும் வருகை தரும்
வண்ணத்துப் பூச்சி!
மெருகு உடல் பளபளக்கும்
மென்பட்டுப் பூச்சு!
படபடக்கும் சிறகு எழில்
பன்மலர்ச் சோலை!
நடனமிடும் பூவனங்கள்
நாட்டியச் சாலை!
மலர்கள் தூது நட்சத்திரம்
மகரந்தம் சூடும்!
திலகமிட்ட பூச்சித்திரம்
தேன்துளி தேடும்!
பரபரக்கும் பரபரக்கும்
பட்டாம் பூச்சி!
வரவு தரும் நாளெல்லாம்
வண்ணக் காட்சி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.