
ராமகிருஷ்ண பரமஹம்சர் தட்சிணேஸ்வரம் காளி கோயிலில் பணிபுரிந்தபோது ஒரு பக்தர் வந்து அவரிடம் கேட்டார்-
""ஐயா, நீங்கள் காளிதேவியைப் பார்த்திருக்கிறீர்களா?''
""ஓ... பார்த்திருக்கிறேன். காளியோடு தினமும் பேசுகிறேனே..!''
""நீங்கள் சொல்வது உண்மையானால் காளியை எனக்காக வரவழையுங்களேன்...'' என்று கேட்டார் அந்த பக்தர்.
அதற்கு ராமகிருஷ்ணர், "'நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?'' என்று கேட்டார்.
""டாக்டர்...''
""அப்படியானால் இப்போதே என்னை டாக்டராக்குங்கள் பார்க்கலாம்..'' என்றார் ராமகிருஷ்ணர்.
""அதெப்படி முடியும்? படித்தால்தானே முடியும்!'' என்றார் அவர்.
உடனே ராமகிருஷ்ணர் கூறினார் -
""படித்தால்தான் மருத்துவராக முடியும் என்பது போல, காளிதேவியைக் காணவும் பக்தி என்ற படிப்பு அவசியம். அதை உண்மையாகப் படித்துவிட்டு வாருங்கள்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.