

வீட்டில் மின்னொளி பாய்ச்சிடவும்
விரும்பும் சாதனம் இயக்கிடவும்
நாட்டில் தொழில்வளம் பெருக்கிடவும்
நலமாய் உதவிடும் மின்சாரம்!
அனலும் புனலும் ஆதாரம்
அளவாய்த் தந்திடும் மின்சாரம்
தினமும் அதனைச் சிக்கனமாய்
செலவு செய்வோம் பக்குவமாய்!
வேண்டும் போது விளக்கெரிப்போம்
வேண்டாத பொழுது அதையணைப்போம்
தூண்டில் மீனாய்ச் சிக்குண்டே
துடித்திட வேண்டாம் மின்வெட்டால்
அலுவல் உள்ள நேரத்தில்
அளவாய் அதனைக் கையாண்டால்
அல்லல் நமக்கும் இல்லையே
அதனால் இல்லை தொல்லையே!
காற்று ஆலையில் மின்சாரம்
கதிரவன் ஒளியிலும் மின்சாரம்
போற்று கின்ற விஞ்ஞானம்
புவியில் அதனின் திறனறிவோம்!
குப்பை கூட மின்சாரம்
கொடுக்கும் என்றே அறிவியலார்
தப்பாது இன்றே தெரிந்துரைத்தார்
தகைவாய் அதனின் பயனறிவோம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக - விசிக இடையே மீண்டும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! இன்று கையொப்பம்?

தொடரும் போர்.. ஈரான் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது அமெரிக்க, இஸ்ரேலிய படைகள் தாக்குதல்!

நத்தம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து!

தனுசு ராசியா நீங்க? தினப்பலன்கள்!
வீடியோக்கள்

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

