கெட்டிக்கார ஆட்டுக்காரன்

அந்த நாட்டின் அரசன் தனது நாட்டில் யாரும் மிருகங்களைக் கொல்லக் கூடாது என்று கண்டிப்பான உத்தரவு போட்டு அதை மக்களுக்கு அறிவித்தான். ஆடு வளர்ப்பவன் ஒருவன், ஆட்டு மாமிசத்துக்காக தன்னிடம் இருந்த ஆடுகளில் ஓர
Updated on
1 min read

அந்த நாட்டின் அரசன் தனது நாட்டில் யாரும் மிருகங்களைக் கொல்லக் கூடாது என்று கண்டிப்பான உத்தரவு போட்டு அதை மக்களுக்கு அறிவித்தான். ஆடு வளர்ப்பவன் ஒருவன், ஆட்டு மாமிசத்துக்காக தன்னிடம் இருந்த ஆடுகளில் ஓர் ஆட்டை வெட்டிக் கொன்றான். இதை அறிந்த அரசாங்க அதிகாரிகள் அவனைப் பிடித்து அரசனிடம் கொண்டுபோய் நிறுத்தினார்கள். விசாரணை தொடங்கியது:

அரசன்: யாரும் மிருகங்களைக் கொல்லக் கூடாது என்று உத்தரவு போட்டிருக்கிறேன்; அரசாங்க உத்தரவை மீறி நீ ஓர் ஆட்டைக் கொன்றிருக்கிறாய், அல்லவா?

ஆட்டுக்காரன்: (எதுவும் பதில் சொல்லாமல் மெüனமாக நின்றான்)

அரசன்: ஏ.. முட்டாள்! என் முன்னால் இப்படி மெüனமாக ஏதும் பேசாமல் நிற்கிறாய்! கடவுள் உன்னை விசாரிப்பாரே, அப்போது என்ன பதில் சொல்லப் போகிறாய்?

ஆட்டுக்காரன்: கடவுளுக்கு முன்னால் நான் பேசவேண்டிய அவசியமே இருக்காது! அரசராகிய நீங்கள்தான் எனக்குத் தண்டனை கொடுத்து என்னைக் கொன்றுவிடப்போகிறீர்களே!

அரசன்: கடவுள் என்ன செய்வார் தெரியுமா? உனக்கு மறுபடியும் உயிர் கொடுத்து அவருக்கு முன்னால் நிறுத்தி உன்னை விசாரிப்பார்!

ஆட்டுக்காரன்: விசாரணையின் போது சாட்சி சொல்ல யார் வருவார்? செத்துப்போன ஆடும் உயிர்பெற்று வந்தால்தானே சாட்சி சொல்லமுடியும்?

அரசன்: ஏ... முட்டாளே! உனக்கு உயிர் கொடுத்து விசாரணைக்கு அழைத்தது போலவே, கடவுள் ஆட்டுக்கும் உயிர் கொடுத்து அழைப்பார்; அது சாட்சி சொல்லும்.

ஆட்டுக்காரன்: (சிரித்துக்கொண்டே....) ஆடு உயிர் பெற்றுவிட்டால், கடவுள் எப்படி என்னைத் தண்டிப்பார்? ஆடுதான் அவருக்கு முன்னால் உயிரோடு நின்று கொண்டிருக்குமே!

அரசனுக்கு குழப்பமாகிவிட்டது. ஆட்டுக்காரனுடைய சமயோசித புத்தியை நினைத்துத் தன் கோபத்தை அடக்கிக் கொண்டான்; சிரித்துக் கொண்டே ஆட்டுக்காரனை விடுதலை செய்து போகச் சொல்லிவிட்டான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com