பொன்மொழிகள்

உடல் நலமுள்ளவருக்கு ஒவ்வொரு நாளும்  விருந்துதான். - துருக்கி
பொன்மொழிகள்
Updated on
1 min read

 1. சுத்தம் பிரார்த்தனைக்குத் திறவுகோல். - அரேபியா
 2. சுத்தம் ஆயுளை நீடிக்கச் செய்யும். - இங்கிலாந்து
 3. கைகளோடு மனமும்
 சுத்தமாயிருக்க வேண்டும். - கிரீஸ்
 4. தொட்டி நிறையவுள்ள பன்னீரைச் செத்த நாய் நாறடித்துவிடும்.
 - பாரசீகம்
 5. ஓடுகிற நீரில் அசுத்தம் இராது. - இந்தியா
 6. தங்கம் சுத்தமாயிருந்தால் அது நெருப்புக்கு
 அஞ்சுவானேன்?
 - ஆப்ரிக்கா
 7. வாரியுள்ள தலை மற்றக் குறைகளை
 மறைக்கின்றது.
 - அயர்லாந்து
 8. கடவுள் ஏழையை
 நேசிப்பார்; ஆனால்
 அசுத்தமானவரை நேசிக்க மாட்டார். - ஸ்பெயின்
 9. நல்ல காற்று ஆயிரம் அவுன்ஸ் மருந்துக்குச் சமம். - ஜப்பான்
 10. மக்கள் ஆரோக்கியமாக
 இருந்தால் வைத்தியர்
 களுக்கு நோய் வரும்.
 - ஜெர்மனி
 11. உடல் நலமுள்ளவருக்கு ஒவ்வொரு நாளும்
 விருந்துதான். - துருக்கி
 12. ஒருவனுக்கு உடல்நலம் குறைவு என்றால்,
 எல்லாமும் குறைவு என்று பொருள்.
 - பின்லாந்து
 13. பாண்டம் சுத்தமாயில்லாவிட்டால் அதில்
 ஊற்றுபவை எல்லாம் கெட்டுவிடும்.
 - லத்தீன்
 14. பரிசுத்தவான்களுக்கு எல்லாப் பொருள்களும் பரிசுத்தமே. - புதிய ஏற்பாடு
 15. ஆரோக்கியமுள்ள உடல் ஆன்மாவுக்கு விருந்து மண்டபம்; நோயுள்ள உடல் அதன்
 சிறைக்கூடம். - பேகன்
 -தொகுப்பு: நா.கிருஷ்ணவேலு, புதுச்சேரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com