சிரிப்பு ஆராய்ச்சி...

நியூயார்க் மாநில பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆர்தர் ஸ்டோன் சிரிப்பு பற்றிய தன் ஆய்வின் மூலம் பல உண்மைகளைக் கண்டறிந்துள்ளார். அவர் கூறுகிறார்: ''உலகின் மிகச் சிறந்த மருந்து மனம் விட்டுச் சிரிப்பதுதான்''.
சிரிப்பு ஆராய்ச்சி...
Published on
Updated on
1 min read

நியூயார்க் மாநில பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆர்தர் ஸ்டோன் சிரிப்பு பற்றிய தன் ஆய்வின் மூலம் பல உண்மைகளைக் கண்டறிந்துள்ளார். அவர் கூறுகிறார்: ''உலகின் மிகச் சிறந்த மருந்து மனம் விட்டுச் சிரிப்பதுதான்''.
இப்போது வெளிநாடுகளில் மருத்துவர்கள் நோயாளிகளுக்குச் சிரிப்பு வீடியோ படங்களைப் பாருங்கள் என்பதை ஒரு பரிந்துரையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
வில்லியம் பிரை என்பவர் ஒரு மருத்துவ அறிஞர். அவரும் சிரிப்பைப் பற்றி ஆய்வுகள் மேற்கொண்டார். ""நோய் எதிர்ப்பு சக்தியை உடம்பில் உற்பத்தி செய்யக்கூடிய வெள்ளை அணுக்களின் பணியை சிரிப்பு முடுக்கி விடுகிறது'' என்பது அவர் கண்டு
பிடித்த உண்மை!
சிரிப்பைப் பற்றி ஆய்வு செய்கிற மருத்துவர்களுக்கு "ஜெல்லோடோலாஜிஸ்ட்' என்று பெயர்.
இவர்கள் ஏராளமான ஆய்வுகளை மேற்கொண்டு பல உண்மைகளைக் கூறியுள்ளனர்.

• சிரிப்பு - நம் குருதியில் அதிகப்படியான பிராண வாயு இருப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

• சிரிப்பினால் இதயத் தசைகள் வலுவடைகின்றன.

• ரத்த அழுத்தம் சீராகிறது.
 
• நுரையீரல் நன்றாக வேலை செய்கின்றது.

• என்சீபேலின்ஸ் என்கிற ஹார்மோனை நம் உடம்பில் சுரக்கச் செய்து தசை வலியை நீக்கச் செய்கிறது.

• சிரிப்பதனால் குருதிக் குழாய் விரிவடைகின்றது.

• குருதி ஓட்டம் அதிகரிக்கின்றது.
 
• மன இறுக்கம் தளர்கின்றது.
 
• சிந்தனைக்கும் உணர்ச்சிகளுக்கும் தலைமைப் பீடமாகச் செயல்படுகின்ற நமது மூளையின் வலது பக்கப் பகுதி சிரிப்பினால் நன்றாக வேலை செய்கின்றது.

• சிரிப்பு, பெப்டிக் அல்சர் போன்ற இரைப்பைப் புண்கள் வராமல் தடுக்கின்றது.

இவையெல்லாம் நீண்ட கால ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்ட உண்மைகள்.
உலகத்திலுள்ள உயிரினங்களில் மனிதர்கள் மட்டுமே நகைச்சுவையைக் கேட்டுச் சிரிக்க முடியும். சிரித்து மகிழ்ந்து வாழுங்கள்.
-அ.சா.குருசாமி,
திருநெல்வேலி.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com