

விழிகள் இரண்டும் பழுதானால்
வெளிச்சமும் இருட்டும் ஒன்றாகும்
பழுதுகள் இன்றி விழிகளைநாம்
பாது காப்பது நன்றாகும்!
கண்களை இழந்து தவிப்போர்க்கு
கண்களைத் தானம் செய்திடுவோம்
கண்ணீர் துடைக்கக் கைகொடுப்போம்
கண்ணொளி பெற்றிட கண்கொடுப்போம்!
இருண்ட விழிகளில் ஒளியேற்ற
எழுச்சி யுடனே வாருங்கள்
பெருமை யோடு கண்ணிரண்டைப்
பார்த்திட நீங்கள் தாருங்கள்!
இறந்த பின்பும் நம்கண்கள்
இந்த உலகைப் பார்க்கட்டும்
திறந்த விழிகள் நன்றியுடன்
தினம்தினம் நம்மை வாழ்த்தட்டும்!
மண்ணில் விழியின் மரணங்கள்
மனித மனத்தின் துயரங்கள்
கண்களைத் தானம் செய்வோரின்
கருணை மனங்களோ வைரங்கள்!
கண்களைக் கொடுத்தார் கண்ணப்பர்
கனிவோடு சிவனுக்கு அந்நாளில்
வண்ணமும் வடிவமும் கண்டுணர
வழங்குவோம் கண்களை இந்நாளில்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக - விசிக இடையே மீண்டும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! இன்று கையொப்பம்?

தொடரும் போர்.. ஈரான் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது அமெரிக்க, இஸ்ரேலிய படைகள் தாக்குதல்!

நத்தம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து!

தனுசு ராசியா நீங்க? தினப்பலன்கள்!
வீடியோக்கள்

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

