இந்தப் பெயர்கள் எப்படி வந்தன?

 "சஹாரா' என்னும் சொல்லுக்கு அரேபிய மொழியில் "பாலைவனம்' என்று பொருள்.
இந்தப் பெயர்கள் எப்படி வந்தன?
Updated on
1 min read

சஹாரா:
 "சஹாரா' என்னும் சொல்லுக்கு அரேபிய மொழியில் "பாலைவனம்' என்று பொருள்.

"ஆரஞ்ச்' வந்த வழி:
 வடமொழியில் "நருகுங்கோ' (NAGRUNGO) ஆக இருந்து இந்துஸ்தானியில் "நாருங்கோ' ஆகி உருதுவில் நாரஞ்சாகி, இத்தாலியில் "ஆரஞ்சியா'வாகி ஆங்கிலத்தில் "ஆரஞ்ச்' ஆகிவிட்டது இந்த ORANGE.

தாய் + தந்தை:
 தாய், தந்தை என்ற பெயர்களுக்குக் காரணம் என்ன தெரியுமா? குழந்தையைத் தாவி எடுத்துத் தழுவுதலால் "தாய்' என்று பெயர் வந்தது. அதேபோல குழந்தையைத் தந்த தலைவன் தந்தை. தந்த + ஐ இரண்டும் சேர்ந்தது "தந்தை' ஆனது.

உதகமண்டலம்:
 தோடர்கள் மலைப்பகுதிகளில் வாழ்கிறார்கள். இவர்கள் குடிசைகள் இருக்கும் பகுதிகளுக்கு
 "மந்து' என்று பெயர். உதகையில் இவர்கள் குடிசைகள் இருக்கின்றன. இதற்கு "உத மந்து' என்று பெயர். இதனால்தான் இந்தப் பகுதிக்கு "உதகமண்ட்' என்றும் "உதக மண்டலம்' என்றும் பெயர் வந்தது.

காகிதம்:
 "காகிதம்' என்பது தமிழ்ச் சொல் அல்ல. அரபுச் சொல். "காகஸ்' என்ற அரபுச் சொல்தான் தமிழில் "காகிதம்' என்று வழங்கப்படுகின்றது.

திங்கள்:
 திங்கள் என்றால் "சந்திரன்'. வானத்தில் தோன்றி, வளர்ந்து, தேய்ந்து, மறையும்வரை உள்ள கால அளவே "திங்கள்' அல்லது "மாதம்' ஆகும்.

கிருதா:
 "கிருதா' என்ற சொல் "கிர்தா' என்ற உருதுச் சொல்லிலிருந்து வந்தது.

சர்க்கரை:
 சர்க்கரை என்ற சொல் "சொர சொரப்பு' என்று வழங்குவதால் சர்க்கரை. இது "ஜர்ஜரா' என்ற வடசொல்லின் திரிபு.

டொபாக்கோ (புகையிலை):
 ஊதல், உண்ணல், உறிஞ்சல் ஆகிய மூன்றுக்கும் பயன்படுவது புகையிலை. இந்த இலைக்கு டொபாக்கோ என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? இந்த இலையைப் போட்டு சிவப்பிந்தியர்கள் புகை பிடிப்பதை வால்டர் ராலே என்பவர் முதன்முதலாகப் பார்த்து அறிந்துகொண்டார். இந்த இலைகளைச் சுருட்டி வாயில் வைத்துப் புகைத்தால் அந்தப் புகையை இழுப்பது சுவாரஸ்யமாக இருக்கும் என்பதை சிவப்பிந்தியர்கள்தான் முதன் முதலாகக் கண்டுபிடித்தனர். இலைகளை அம்மாதிரி சுருட்டுவதை அவர்கள் தங்கள் மொழியில் "டோபாகோ' என்று அழைத்தனர். அதுவே நாளடைவில் டொபாக்கோ என்று மருவி விட்டது.

பஞ்சாங்கம்:
 கரணம், திதி, நட்சத்திரம், யோகம், வாரம் - இவைகள் அடங்கியதுதான் "பஞ்சாங்கம்'. பஞ்ச் என்றால் ஐந்து. அங்கம் -பங்கு வகிப்பது; இடம்பெறுவது.
 முதலில் சொன்ன ஐந்தும் அங்கம் வகிப்பதால் "பஞ்சாங்கம்' என்று பெயர் வந்தது.

ஆலமரம்:
 ஆலமரத்துக்கு ஆங்கிலத்தில் "பன்யன்' என்று பெயர். பனியன் என்னும் சில வியாபாரிகள் பாரசீக வளைகுடாவில் "பந்ரா அப்பாஸ்' என்னும் துறைமுகத்துக்கு அருகில் இருந்த ஒரு ஆலமரத்தின் அடியில் கோயில் கட்டி வழிபட்டு வந்தார்கள் என்றும்,
 அதனால் அந்த மரத்துக்கு பன்யன் என்ற பெயர் வந்ததாகவும் கூறுகிறார்கள்.
 

 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com