

பப்பர பப்பர பப்பர பப்பர
பரபரக்கும் கோழி
எட்டுக் குஞ்சுகளை கூட்டிக்கிட்டு
வருது பார் ஜாலி
குப்பமேட்டை கிளறிஅது
உணவுத்துகளை பொறுக்கும்
குஞ்சிக்கெல்லாம் உண்ணக்கொடுத்து
கண்டு மகிழ்ந்து நிற்கும்
டக்க டக்கர டக்கர டக்கர
வட்டமிடும் காகம்
கோழிக்குஞ்சை தூக்கஅது
திட்டமிடும் நேரம்
கொக்ககொக்க கொக்கோ என
கூவிகுஞ்சுகளை அழைக்கும்
சிறகுக்குள்ளே குஞ்சைமூடி
அரவணைத்தே காக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.