பொன் மொழிகள்

கஷ்டமாக இருப்பதால் எதையும் சாத்தியமானதல்ல என்று எண்ணிவிடக் கூடாது!
பொன் மொழிகள்
Updated on
1 min read

1. உண்மைக்குப் பகை, உள்ளத்தில் தோன்றும் பயம்! - ராஜாஜி
 2. கஷ்டமாக இருப்பதால் எதையும் சாத்தியமானதல்ல என்று எண்ணிவிடக் கூடாது! - மகாத்மா காந்தி
 3. சரியாக நன்றி சொல்லக் கற்றுக் கொள்; வாழ்வின் பேரின்பம் அதுவே! - தக்கரே
 4. சொல்லக்கூடாத பேச்சானால் அதைச் சொல்லாமல் இருப்பதே மேல்! - மகாவீரர்
 5. நற்பண்பு இல்லாதவர்கள் உப்பில்லாத பண்டங்களுக்குச் சமமானவர்கள்! - சாய்பாபா
 6. நல்ல எண்ணத்தோடு இரு. அது உன் நடத்தையைப் பாதுகாக்கும்! - வள்ளலார்
 7. உழைப்பில் பலர் பங்கெடுத்துக் கொண்டால் வேலை எளிதாகி விடும்! - ஹோமர்
 8. வாழ்க்கை ஒரு மலர்; அதில் ஊறும் தேன் அன்பு!
 - விக்டர் ஹியூகோ
 9. யாருக்கும் உதவி செய்யாதவர்கள், பிறர் உதவியை எதிர்பார்க்க முடியாது! - ஈசாப்
 10. பிறர் குற்றம் காண்பதும், தன் குற்றம் மறப்பதுமே மடைமையின் முழு அடையாளம்! - ஸிஸரோ
 தொகுப்பு: ஏ.சக்தி, ஏ.கவிப்ரியா, ஏ.முத்து, வேலூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com