பொன்மொழிகள்

தனக்குத் தெரிந்தவற்றை மட்டும் மனிதன் பேசுவானாகில் உலகில் முழு அமைதி நிலவும். - பெர்னார்ட் ஷா
பொன்மொழிகள்
Updated on
1 min read

அமைதி
 

 1. தனக்குத் தெரிந்தவற்றை மட்டும் மனிதன் பேசுவானாகில் உலகில் முழு அமைதி நிலவும். - பெர்னார்ட் ஷா
 2. போருக்குக் குறையாத பெருமையுள்ள வெற்றிகள் அமைதிக்கும் உண்டு. - மில்டன்
 3. அமைதியில்தான் அழகின் நிறைவுத்தன்மை இருக்கிறது. - தாகூர்
 4. சமாதானத்தை உண்டாக்குபவர்கள் பாக்கியசாலிகள். - புதிய ஏற்பாடு (பைபிள்)
 5. போரைப் போலவே அமைதியும் புகழ்பெற முடியும். - லத்தீன் பழமொழி
 6. இனிய அமைதி மக்களுக்கு ஏற்றது; கொடுமையான கோபம் விலங்குகளுக்கு உரியது. -லத்தீன் பழமொழி
 7. அமைதி உள்ள இடத்தில்தான் இறைவன் உள்ளான். - இங்கிலாந்து
 8. சாந்தமாக வாழ விரும்புவோன் ஒரு கையில் நெருப்பு, ஒரு கையில் தண்ணீர் வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். - செர்பியா
 9. அமைதி உணவளிக்கிறது. போர் வீணாக்குகிறது. அமைதி ஜனப் பெருக்கத்தை உண்டாக்குகிறது, போர் அவர்களை அழிக்கின்றது. - டென்மார்க்
 10. நிம்மதியான அமைதி என்பது முதல் சண்டை வரைதான். - ரஷ்யா
 -தொகுப்பு: நா.கிருஷ்ணவேலு, புதுச்சேரி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com