பொன்மொழிகள்

ஒருவன் உள்ளத்தை அறிய வேண்டுமானால் அவனுடைய  சொற்களைக் கவனி. - சீனா
பொன்மொழிகள்
Published on
Updated on
1 min read

1. ஒருவன் உள்ளத்தை அறிய வேண்டுமானால் அவனுடைய
 சொற்களைக் கவனி. - சீனா
 2. ஆயிரம் சொற்களைக் கேட்டுக் கொள்; நீ ஒரு வார்த்தை பேசு.
 - கீழைநாடுகள்
 3. நீ வாயைத் திறக்கும்போது கண்களும் விழிப்பாக இருக்கட்டும்.
 - ஆர்மீனியா
 4. கல்லையும் சொல்லையும் விட்டால் போச்சு. - இங்கிலாந்து
 5. பேசத் தெரிந்தவனுக்கு எல்லா இடங்களும் சொந்த இடம்
 போன்றவை. - ஜெர்மனி
 6. நாவாகிய பேனாவை இதயத்தின் மையில் தொட்டு எழுத வேண்டும். - லத்தீன்
 7. முதலில் சிந்தனை செய்; பிறகு பேசு. - இங்கிலாந்து
 8. அதிகப் பேச்சு அதிக மடமை. - யூதர்
 9. செல்வத்தை விடப் பேச்சைப் பாதுகாப்பது நலம். - கிரீஸ்
 10. சொற்கள் குறைந்தால்
 குற்றங்கள் குறையும். - சீனா
 11. சொற்களை எண்ணக் கூடாது; எடை போட்டுப் பார்க்க வேண்டும். - போலந்து
 12. உன்னை நான் தெரிந்து கொள்ள வேண்டும்; நீ பேசு. - ஜெர்மனி
 13. வாயில் இருக்கிறது வழி.
 - இந்தியா
 14. எவராயினும் நாவைக் காக்க வேண்டும்; இன்றேல் தீராத துன்பம் ஏற்படும்.
 - இந்தியா
 -தொகுப்பு: அ.சா.குருசாமி, செவல்குளம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com