

ஊட்டி மலையின் அழகைப்பாரு
உயர்ந்து நிற்கும் சிகரம்பாரு
காட்டில் நிறைந்த பசுமைபாரு
காணும் கண்ணில் குளிர்ச்சிபாரு
வாட்டும் வெப்பம் தணித்திடவே
வந்து குவியும் கூட்டம்பாரு
மேட்டுக் குடியின் மக்கள்போல்
மேன்மை யான தோற்றம்பாரு
பரந்து விரிந்த ஏரிபாரு
படகு ஓடும் எழிலைப்பாரு
சுரந்த நீரை மேகமுமே
சொட்டு கின்ற மழையைப்பாரு
மலையில் ஏறும் ரயிலைப்பாரு
மகிழ்ச்சி யான பயணம்பாரு
மலைக்க வைக்கும் காட்சிபாரு
மனத்தில் இன்பம் பொங்கும்பாரு
ஆனைக் கூட்டம் வருதுபாரு
அதன் நடையில் மிடுக்கைப்பாரு
வானு யர்ந்த மரங்கள்பாரு
வளமை யான ஊட்டிபாரு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக - விசிக இடையே மீண்டும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! இன்று கையொப்பம்?

தொடரும் போர்.. ஈரான் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது அமெரிக்க, இஸ்ரேலிய படைகள் தாக்குதல்!

நத்தம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து!

தனுசு ராசியா நீங்க? தினப்பலன்கள்!
வீடியோக்கள்

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

