
மகாத்மா காந்தி ஒருமுறை ரயிலில் வழக்கம்போல மூன்றாம் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்துகொண்டிருந்தார்.
அப்போது பலத்த மழை பெய்ததால் காந்தி இருந்த பெட்டியில் மழை நீர் ஒழுகி, தேங்கி நின்றது.
வண்டி அடுத்த நிலையத்தில் நின்றபோது, நிலைய அதிகாரி காந்தியிடம் வந்து, ""இந்தப் பெட்டியில் தாங்கள் பயணம் செய்ய வேண்டாம். வேறு பெட்டி ஏற்பாடு செய்கிறேன். அதில் பயணம் செய்யுங்கள்'' என்றார்.
காந்தி, ""அப்படியென்றால் அந்தப் பெட்டியில் வரும் பயணிகளை என்ன செய்வீர்கள்?'' என்று கேட்டார்.
""அவர்களை இந்தப் பெட்டிக்கு மாற்றி விடுவோம்...'' என்றார் அந்த அதிகாரி.
அதைக் கேட்ட காந்தி, ""அவர்கள் அத்தனை பேரும் இந்தப் பெட்டியில் ஏற்பட்டுள்ள சங்கடங்களைப் பொறுத்துக் கொண்டு பயணம் செய்ய முடியும் என்றால், நானும் அதை ஏற்றுக்கொண்டு இதே பெட்டியிலேயே பயணம் செய்கிறேன்! என் ஒருவனுக்காக பலர் இன்னலுக்கு உள்ளாவதை நான் விரும்பவில்லை!'' என்றார்.
நிலைய அதிகாரி வியப்படைந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.