
தமிழினில் உள்ளது பற்பல மை - நாம்
தெரிந்திட வேண்டும் அதன்மகிமை
அமிழ்தென பேச்சினில் நல்இனிமை - கொண்டு
அகிலத்தை வென்றால் தனிப்பெருமை
கோபத்தை ஒழித்து உயர்பொறுமை - தனை
கைக்கொண்டு வாழ்தல் அறிவுடைமை
பாவத்தைச் செய்வது பெரும் மடைமை - என்றும்
பண்பற்ற வாழ்வில் வரும் சிறுமை
உயிர்களைக் கொல்லுதல் மிகக் கொடுமை - எல்லா
உயிரையும் நேசித்தல் இரக்கத் தன்மை
கயவரையும் மன்னித்தல் அதுமேன்மை - கற்ற
கல்விக்கு அழகு பணிவுடைமை
பெரியோரை மதித்தல் பண்புடைமை - அதை
பின்பற்றுதல் என்றும் நம்கடமை
வறியவர்க்கு ஈதல் அருளுடைமை - நல்ல
வாழ்க்கைக்கு அழகு மிக எளிமை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.