
ஜனநாயகமெனும்
குடியரசமைந்தது ஜனவரியில்
நாட்கள் இரண்டு குறைவென்றாலும்
நலமே விளையும் பிப்ரவரியில்
மாண்புகொள் உலக
மகளிர் தினம்வரும் மார்ச்சினிலே
மூண்டிடும் மடமை
முட்டாள்கள் தினம்வரும் ஏப்ரலிலே
மேதினி புகழும்
உழைப்பாளர் தினம் மேயினிலே
மேதைகளாக்கும்
பள்ளிகள் திறப்பது ஜூன்தனிலே
காமராசரின்
கல்வி வளர்ச்சிநாள் ஜூலையிலே
சேமமுற நாம்
விடுதலை பெற்றது ஆகஸ்டிலே
ஆசிரியர் தினம்
கொண்டாடி மகிழ்வது செப்டம்பரில்
தேசப்பிதாவாம்
காந்தி ஜெயந்தியோ அக்டோபரில்
நேரு மாமாவின்
குழந்தைகள் தினம்வரும் நவம்பரிலே
சீருடைய ஏசுவின்
பிறப்புக் கொண்டாட்டம் டிசம்பரிலே
இவ்விதமாய் வரும்
ஆங்கில மாதங்கள் பன்னிரெண்டு
ஒவ்வொரு மாதமும்
உயர்வுபெறும் தனிச்சிறப்பு கொண்டு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.