தாலாட்டு

ஆராரோ ஆரிராரோ பாடிட, தாயிருக்கநீ அழலாகுமோ 
Published on

 ஆராரோ ஆரிராரோ பாடிட, தாயிருக்க
 நீ அழலாகுமோ
 
 ஆறுதலாய் அள்ளி அணைக்க தந்தையிருக்க
 நீ ஏங்கலாகுமோ
 
 ததக்காம் புதக்காம் விளையாட தாத்தாயிருக்க
 நீ தேம்பலாகுமோ
 
 பாட்டு படித்து, கதைகூற பாட்டியிருக்க
 நீ பதறலாகுமோ
 
 சிக்கல் பிக்கல் தீர்க்க சித்தியிருக்க
 விக்கி நிற்கலாகுமோ
 
 மாய்ந்து மாய்ந்து பார்க்க மாமனிருக்க
 நீ மறுகலாகுமோ
 
 அடித்த கை உடைத்திட அத்தையிருக்க
 நீ அஞ்சலாகுமோ
 
 அண்டம் காக்கும் பரபிரம்மமே உன்னிலிருக்க
 நீ தயங்கலாகுமோ
 
 நேற்று முளைத்த நல்மணியே நாடுன்னால்
 பெருமை கொள்ளுமோ!
 

 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com