தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

உறவுமுறை

தாத்தா பாட்டி அம்மா அப்பா என நம்மைச்சார்ந்த உறவு முறை அறிவோம்

News image
Updated On :15 மார்ச் 2013, 4:58 am

 தாத்தா பாட்டி அம்மா அப்பா என நம்மைச்
 சார்ந்த உறவு முறை அறிவோம்
 தந்தையையும் தாயையும் பெற்று வளர்த்தவர்
 தாத்தா பாட்டி எனும் வகை புரிவோம்!
 
 முன்னே பிறந்தவர் மூத்தவர் இவர்களை
 முறைகூறி அழைப்பதோ அண்ணன் அக்காள்
 பின்னே பிறந்தவர் இளையவர் தமைநாமும்
 பேசி அழைப்பதோ தம்பி தங்கை!
 
 அப்பாவின் அண்ணா பெரியப்பா! அதேபோல
 அம்மாவின் அக்காவோ பெரியம்மாவாம்
 அப்பாவின் தம்பியோ சித்தப்பா! இதேபோல
 அம்மாவின் தங்கையோ சித்தியாகும்!
 
 அப்பாவின் சகோதரிகள் பெரியஅத்தை சின்னஅத்தை
 அம்மாவின் சகோதரர் தாய்மாமன் மாமா
 மனைவியின் சகோதரி மைத்துனி கொழுந்தியாம்
 மதனி என்பது அண்ணன் மனைவிதான்! ஆம்!
 
 அம்மா அப்பா பெற்றமகன் மகள்! பெற்றசேய்
 அன்புடன் பாசமும் உள்ள பேரன் பேத்தி
 அம்மாவை ஆச்சி பாட்டி என அழைப்பர்
 அப்பாவைத் தாத்தா என உரைப்பர்!
 
 இத்தனை உறவுமுறைகளையும் நாட்டின்
 இன்றையக் குழந்தைகள் அறிந்திடுவோம்!
 அத்தனை உறவுமே கூட்டுக் குடும்பமாய்
 அன்று இருந்ததும் புரிந்திடுவோம்!

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.