
* ஷர்பீ என்று ஒரு நாய் வகை சீனாவில் உள்ளது. இந்த வேட்டை நாயின் உடல் வேட்டையாடும்போது விறைத்துக் கொண்டும் சாதாரண நேரங்களில் மடிப்பு மடிப்பாக சதை தொங்கும்படியாகவும் இருக்கும்.
* ஜெர்மனியின் டாபர்மேன் வகை நாய்கள் உலகப் புகழ்பெற்றவை.
* நாய்களுக்குப் பயிற்சி அளிக்கும் நிறுவனம் ஒன்று கலிபோர்னியாவில் உள்ள சான்டோரோசா என்ற இடத்தில் இயங்கி வருகிறது.
* மனிதர்களைவிடப் பத்து மடங்கு அதிக கேட்கும் சக்தியும் மோப்ப சக்தியும் நாய்களுக்கு உண்டு.
* நாய், ஓநாய் இனத்திலிருந்து வந்தது என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
* உலகம் முழுவதும் உள்ள வேட்டை நாய்கள் மணிக்கு 35.5 மைல் வேகத்தில் ஓடக்கூடியவை.
* நாய்கள் ஒரே நேரத்தில் இரண்டு கண்களாலும் வேறு வேறு பொருட்களைப் பார்க்கும் ஆற்றல் பெற்றவை.
* நாய்களின் வாழ்நாள் பதினைந்து ஆண்டுகள்.
* பிரான்ஸ் நாட்டு மக்கள், தங்கள் குழந்தைகளுக்கும் மேலாக நாய்களை நேசிக்கிறார்கள். அதனால்தான், அவர்கள் வளர்க்கும் நாய்கள் இறந்து விட்டால் அவைகளுக்காகத் தனியே கல்லறைகள் கட்டி நினைவுகூர்கிறார்கள்.
* நாய்களுக்கான் பொது கழிப்பிடங்களைக் கட்டி வைத்திருக்கிறார்கள் பாரீஸ் நகர மக்கள்.
* ஜப்பானியர்கள் நாய்களுக்கென்றே தனி உணவகங்களை நடத்தி வருகிறார்கள்.
* பிரிட்டிஷ் மக்கள் தங்கள் குழந்தைகளின் பராமரிப்புச் செலவைவிட நாய்களுக்கு அதிகமாக செலவு செய்கிறார்கள்.
* ஸ்விட்சர்லாந்து நாட்டில் நாய்களுக்கான
ஓட்டப்பந்தயங்கள் நடக்கின்றன.
* ஜப்பானில் நாய்களுக்குக்கூட வங்கிகளில் தனி சேமிப்புக் கணக்குகள் உள்ளன.
* ஜப்பானில் நாய்களுக்கென பிரத்யேக உடை அலங்காரக்கடைகள் உள்ளன.
* இந்தோசீன மக்களின் நம்பிக்கை கொஞ்சம் வித்தியாசமானது. அங்குள்ள மோய்கள் எனப்படும் மலைவாசிகள் நாய்களைத்
தங்கள் முன்னோர்களாக எண்ணி வழிபடுகின்றனர்.
* ஐரோப்பியர்கள் தங்கள் வளர்ப்புச் செல்லங்களை வெளியே அழைத்துச் செல்ல தனியாகக் கார்கள் வைத்திருக்கிறார்கள்.
* நம் நாட்டில் நாய்களுக்குக் காப்பகங்கள்
உள்ளன.
* தங்களது காவல் தெய்வமாக கிரேக்கர்கள் நாய்களைக் கருதினார்கள்.
* நிலநடுக்கம் ஏற்படுவதை நாய்களின் போக்கைக் கண்டு அறியலாம். நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்னர் நாய்கள் காரணமின்றிக் குரைத்துக்கொண்டே இருக்கும்.
-தொகுப்பு:
சரஸ்வதி பஞ்சு, திருச்சி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.