

1. மண்ணுக்குள்ளே கிடப்பான்.
மங்களகரமானவன்.
அவன் யார்?
2. இவன் வாலுக்கு வையகமே நடுங்கும். இவன் யார்?
3. ஒன்று போனால் மற்றொன்றும் வாழாது. அது எது?
4. பூ கொட்ட கொட்ட
ஒன்றையும் தனியே பொறுக்க முடியவில்லை. அது என்ன?
5. எழுதி எழுதியே தேய்ஞ்சு போனான். அவன் யார்?
6. பச்சைப் பெட்டிக்குள் வெள்ளை முத்துகள். என்ன அது?
7. குண்டுச் சட்டியிலே குதிரை
ஓட்டறான். யார் அவன்?
8. எங்க அக்கா சிவப்பு...
குளித்தால் கருப்பு.
யார் அவள்?
9. கடல் நீரில் வளர்ந்து நல்ல
நீரில் மடிவது என்ன?
10. இரவு வீட்டிற்கு வருவான். இரவு முழுவதும் இருப்பான். காலையில் சொல்லாமல் கொள்ளாமல் போய்விடுவான்.
அவன் யார்?
விடைகள்
1. மஞ்சள்
2. தேள்
3. செருப்பு
4. மழைத்துளி
5. பென்சில்
6. வெண்டைக்காய்
7. கரண்டி
8. அடுப்புக்கரி
9. உப்பு
10. நிலா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.