

பூம்பூம் மாடு ஒன்று
தெருவில் வந்தது
பூம்பூம் மாட்டுக் காரன்
பின்னால் வந்தானே!
கேட்ட கேள்விக்கு எல்லாமே
தலையை ஆட்டுது
நாட்ட முடன்பூம்பூம் மாடு
நல்லது சொன்னது!
வேலை எப்போ கிடைக்குமென்றால்
ஆம் ஆம் என்றது
நாளு எப்போ நல்லதென்றால்
ஆம் ஆம் என்றது!
கல்யாணம் தான்எப்போ என்றால்
தலையை ஆட்டுது
குழந்தை எப்போ பிறக்குமென்றால்
தலையை ஆட்டுது!
எல்லோருக்கும் நல்லதையே சொல்லித்
தலையை ஆட்டுது
பொல்லாங்கே தெரியாமல் தான்
சொல்லி மகிழுது!
டும்டும் மேளம் கேட்டுவிட்டால்
மகிழ்வில் துள்ளுது
கும்மாளம்தான் போட்டுக் கொண்டே
குதித்து ஓடுது!
-இராம. வேதநாயகம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.