

1. கொண்டையில் சிவப்புப்பூ வைத்துக் கொண்டிருப்பான்... அடிக்கடி சிலிர்த்துக் கொள்வான். இவன் யார்?
2. கல்லிலும் முள்ளிலும் காத்திடுவான்... தண்ணீரில் மட்டும் நழுவி விடுவான். இவன் யார்?
3. பச்சைத் தோல் கொண்ட மாமாவுக்குப் பஞ்சு போன்ற சதை, அதற்குள் கடினமான எலும்பு... உடைத்தால் உள்ளம் எல்லாம் வெள்ளை... யார் இந்த மாமா?
4. பார்க்கத்தான் கருப்பு, உள்ளமெல்லாம் சிவப்பு... நமக்குத் தருவான் சுறுசுறுப்பு. இவன் யார்?
5. வெளிச்சத்தில் பிடிப்பதை, இருட்டில் பார்க்கிறோம்... இது என்ன?
6. அங்காடிக்குப் போனேன் யானை கண்டேன் அங்கிருந்த மண்டபத்தில் சேனை கண்டேன்!
அரசரும் அரசியும் கண்டேன்
கொடியுடன் தேரும்
துடிப்புடன் வீரரும் கண்டேன்
என்ன இது என்பதற்குள்
முன்னிருந்தவர் போருக்குத் தயாராக
கண்டேன்
அங்கொரு யுத்தம்...
இது என்ன?
விடைகள்:
1. சேவல்
2. செருப்பு
3. தேங்காய்
4. டீ (தேயிலைத் தூள்)
5. திரைப்படம்
6. சதுரங்கம்
}ரொசிட்டா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.