மதிப்பு!

வகுப்பு முடிந்ததுமே, தந்தை, அரசர், குரு மூவரில் யார் சிறந்தவர்? எனக் கேட்டான் சீடன். "அரசன் பொன்னைப் போன்றவன்; தந்தை வெள்ளியைப் போன்றவர்; குரு இரும்பைப் போன்றவர்'' என்றார்
மதிப்பு!

வகுப்பு முடிந்ததுமே, தந்தை, அரசர், குரு மூவரில் யார் சிறந்தவர்? எனக் கேட்டான் சீடன். "அரசன் பொன்னைப் போன்றவன்; தந்தை வெள்ளியைப் போன்றவர்; குரு இரும்பைப் போன்றவர்'' என்றார் குரு.

 ""அப்படியானால் குரு மற்ற இருவர்களையும்விட மதிப்பில் குறைந்தவரா?'' என்றான் சீடன்.

 ""இல்லை. தங்கம், வெள்ளி இல்லாமல் வாழ முடியும். ஆனால், உணவு உற்பத்திக்கு கலப்பையும், அரிவாள், கோடரியும் இல்லாமல் மானிட வாழ்க்கை நன்கு அமையாது. அவற்றை உருவாக்கிட இரும்பு மிகவும் அவசியம். அவை இருந்தால் பொன்னும், வெள்ளியும் நம் கை வசம்! அதைப்போல நமது மனமும் குணமும் நல்வழியில் சென்றிட குருவின் துணை மிகவும் அவசியம். எனவே மூவரில் குருவே உயர்ந்தவர் என விளக்கம் அளித்தார் குரு.

 சீடன் நன்குணர்ந்து குருவை மதிக்கத் தொடங்கினான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com