
கருவூலம்
* தேசிய விலங்கு: இந்தியாவின் தேசிய விலங்கு வங்காளத்துப் புலி. இது வலிமைக்கும், அச்சமின்மைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
* தேசியப் பறவை: நம் நாட்டின் தேசியப் பறவை மயில் ஆகும். அதன் அழகு மற்றும் தோகை நம் நாட்டின் இயற்கை அழகைப் பிரதிபலிப்பதாக உள்ளது.
* தேசியப்பாடல்: வங்காளக் கவிஞர் பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய "வந்தே மாதரம்' என்ற பாடல் நம் தேசியப் பாடலாகப் போற்றப்படுகிறது. இது தேசிய கீதத்திற்கு இணையாக மதிக்கப்படுகிறது.
* தேசிய மலர்: ஆயிரம் இதழ்களைக் கொண்ட தாமரை மலர் நம் நாட்டின் தேசிய மலராக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
* தேசிய மரம்: பரந்து விரிந்து உறுதியாக நிற்கும் ஆலமரமே இந்தியாவின் தேசிய மரமாகும்.
* தேசியப் பழம்: முக்கனிகளுள் முதன்மை வகிக்கும் மாம்பழமே இந்தியாவின் தேசியப் பழமாகும்.
கா.முத்துச்சாமி, தொண்டி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.