ரோஜர் பேக்கன்

பதிமூன்றாம் நூற்றாண்டின் (1214-1294) வாழ்ந்த ரோஜர் பேக்கன் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார்.

பதிமூன்றாம் நூற்றாண்டின் (1214-1294) வாழ்ந்த ரோஜர் பேக்கன் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார்.

மேகத்தில் உள்ள நீர்த்துளிகள் சூரிய ஒளியினை நேராகப் பிரதிபலிப்பதால் வானவில் தோன்றுகிறது என்பதை முதலில் சொன்னவர் ரோஜர் பேக்கன்! வானவில்லைப் பற்றி முதன் முதலில் ஆய்வு செய்தவர் இவரே! அடிவானத்தில் மட்டுமே வானவில் தெரியும். இரண்டு பேர்கள் வானவில்லை ஒரே நேரத்தில் பார்த்தாலும் வெவ்வேறு விதமாகத் தெரியும் என்றும் ஆயிரம் பேரை வரிசையாக நிற்க வைத்து வானவில்லை பார்க்கச் செய்தால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான வானவில்லைத்தான் பார்ப்பார்கள் என்றும் ரோஜர்பேகன் விளக்கம் அளித்தார்!

வானவில் எப்படித் தோன்றுகிறது என்பதை அறிய அதற்குத் தேவையான கண்ணாடிகளைத் தேடினார். அப்போதுதான் பார்வைக் குறைபாடு உடைவர்கள் கண்ணாடி அணிந்தால் அவர்களுக்கு கண்பார்வை தெரியும் என்பதைக் கண்டுபிடித்தார்.

லென்சுகளை இணைத்து நெடுந்தொலைவு பார்க்கும் டெலஸ்கோப்பையும் கண்டுபிடித்தார்.

அது மட்டுமல்ல.., அவர் வெடி மருந்தை ஆராய்ச்சி செய்து, அது பற்றிய குறிப்புகளை ரகசியமாக எழுதி வைத்தார். ஒரு பங்கு வெடியுப்பும், ஐந்து பங்கு கரியும், ஐந்து பங்கு கந்தகமும் கலந்து பற்ற வைத்தால் மின்னலுக்கு நிகரான நெருப்பும் இடியையொத்த சப்தமும் தோன்றும் என்பதைக் கண்டுபிடித்தார்!

தற்காலத்தில் இருக்கும் கப்பல்கள், கார்கள், விமானங்கள் பற்றிய கற்பனை வடிவங்களை

அப்போதே யூகித்து வடிவமைத்திருந்தது இன்று வரை ஆச்சரியமான தகவலாகும்!

மேலும் கலீலியோவிற்கு முன்பே உலகம் உருண்டை என்பதை ஆதாரங்களுடன் எடுத்துக் கூறினார்! பல கண்டுபிடிப்புகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்த இம்மாபெரும் விஞ்ஞானியை ஒரு சூனியக்காரன் என்று கருதி அவர் மீது கோபாவேசம் கொண்ட மதவாதிகள் அவருக்கு சிறை தண்டனை வழங்கினர். அவரது சடலம்தான் சிறையிலிருந்து வெளியில் வந்தது!

உலகைச் சுற்றிய கொலம்பஸ், "எனக்கு பூமி உருண்டையானது என்று கற்றுக் கொடுத்தவர் ரோஜர் பேகன்தான்' என்று எழுதி வைத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com