
1. ஒரு வீட்டுக்கு இரண்டு வாசல் படி. இது என்ன?
2. ஓடு வைத்திருப்பான், பிச்சை எடுக்க மாட்டான். இவன் யார்?
3. வட்ட வட்ட நிலாவில் வரைஞ்சிருக்கு, எழுதியிருக்கு... இது என்ன?
4. சொன்ன நேரத்தில் ஆரம்பித்துத் தொண்டை கிழிய கத்துவான்... இவன் யார்?
5. இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாக ஓடும் மான் அல்ல... இது என்ன?
6. ஆயிரம் பேர் அணிவகுத்தாலும் ஆரவாரம் இருக்காது.. யார் இவர்கள்?
7. எப்போதும் காதருகில் ரகசியம் பேசிக் கொண்டிருப்பான்... இவன் யார்?
8. பார்க்கத்தான் கருப்பு, ஆனால் உள்ளமோ சிவப்பு. நமக்குத் தருவதோ சுறுசுறுப்பு. இது என்ன?
9. பார்க்க அழகோ அழகு... ஆனால் பாம்புக்கோ பரம எதிரி... இது என்ன?
விடைகள்:
1. மூக்கு
2. ஆமை
3. நாணயம்
4. கடிகார அலாரம்
5. சைக்கிள்
6. எறும்புக்கூட்டம்
7. செல்போன்
8. தேயிலை
9. மயில்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.