92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஜொலிக்கும் வீடு

மலையின் உச்சியில் அந்தச் சிறுமியின் வீடு இருந்தது. அந்தச் சிறுமி தினமும் அதிகாலையில் தன் வீட்டிலிருந்து வெளியே வந்து எதிர்ப்புற மலையைப் பார்த்து வியந்து கொண்டிருப்பாள்.

News image
Updated On :20 ஜூன் 2015, 12:58 pm

கீர்த்தி

மலையின் உச்சியில் அந்தச் சிறுமியின் வீடு இருந்தது. அந்தச் சிறுமி தினமும் அதிகாலையில் தன் வீட்டிலிருந்து வெளியே வந்து எதிர்ப்புற மலையைப் பார்த்து வியந்து கொண்டிருப்பாள். அதற்குக் காரணம் எதிர்ப்புறமுள்ள மலையிலிருந்த வீடுதான். அந்த வீட்டைக் காணக் காண சிறுமியின் மனம் வியப்புற்றது. அந்த வீட்டின் கதவு, ஜன்னல்கள், கூரை அனைத்தும் தங்கத்தால் செய்யப்பட்டவைபோல ஜொலித்துக் கொண்டிருக்கும். சிறுமி தினமும் மனதில் நினைத்துக் கொள்வாள், அந்த வீட்டில் வசிப்பவர்கள் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் என்று.

பல நாள்களாக அந்த வீட்டைக் கவனித்த அந்தச் சிறுமி, ஒருநாள் அந்த வீட்டிற்கே சென்று பார்த்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். எனவே யாரிடமும் சொல்லாமல் ஒரு அதிகாலை வேளையில் புறப்பட்டுச் சென்றாள்.

காலையில் புறப்பட்டவள் எதிர்ப்புற மலை உச்சிக்குச் சென்றடைய மாலைப்பொழுது ஆகிவிட்டது. அங்கு சென்றதும் அந்தச் சிறுமிக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. காரணம், அந்த வீட்டின் கதவு, ஜன்னல்கள் எல்லாம் சாதாரண மரத்திலேயே செய்யப்பட்டிருந்தது. இத்தனை நாளும் தங்கம்போல ஜொலித்த இந்த வீடு ஏன் இப்படி மாறிப்போய்விட்டது என்ற ஏமாற்றத்தால், அந்தச் சிறுமி வீடு திரும்ப நினைத்தாள்.

அப்போது தற்செயலாக அவள் எதிர்ப்புற மலையிலுள்ள தன் வீட்டைக் கவனித்தாள். அவள் வீட்டின் கதவு, ஜன்னல்கள், கூரை அனைத்தும்கூட தங்கம்போல ஜொலித்துக் கொண்டிருந்தன. காலைச் சூரியனின் ஒளிக்கதிர்களால் எதிர்ப்புறமிருந்த மலை வீடு ஜொலிப்பதைப் போல, மாலைச் சூரியனின் கதிர்களால் தன் வீடும் ஜொலிக்கத்தான் செய்கிறது என்ற உண்மை அவளுக்குப் புரிந்தது.

ஆமாம். நம்மிடமே எல்லாச் செல்வங்களும் இருக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.