கதைப்பாடல்: ஒற்றுமையே பலம்!

ஒன்று ஒன்றாய் இருக்கும் தடியைஉடைக்க முடியுமே - அதனை
கதைப்பாடல்: ஒற்றுமையே பலம்!

ஒன்று ஒன்றாய் இருக்கும் தடியை

உடைக்க முடியுமே - அதனை

ஒன்றாய் சேர்த்து கட்டி வைத்தால்

வலிமை நிறையுமே!

காட்டில் ஐந்து பசுக்கள் சேர்ந்து

வாழ்ந்து வந்தது - என்றும்

கனிந்த நட்பால் ஒன்றாய் இருந்து

கலந்து மகிழ்ந்தது!

கிடைக்கும் உணவை பகிர்ந்து கொண்டு

நிறைவு கண்டது - அவைகள்

நடக்கும்போதும் உறங்கும்போதும்

இணைந்து கொண்டது!

இரையைத் தேடி சிங்கம் ஒன்று

அலைந்து திரிந்தது! - இரை

எங்கும் இல்லா நிலையில் சிங்கம்

தவித்துப் போனது!

ஐந்து பசுக்கள் சேர்ந்த கூட்டம்

கண்ணில் பட்டது - இன்று

அடையும் வேட்டை நிறைய என்று

எண்ணிக் கொண்டது!

ஆசை கொண்ட சிங்கம் பசுவைத்

தாக்க நினைத்தது! - முகத்தில்

மீசை துடிக்க பசுவைப் பார்த்து

பாய்ந்து சென்றது!

சிங்க ராஜா அருகில் வந்த

ஓசை கேட்டது! - பசுக்கள்

ஐந்தும் ஒன்றாய் இணைந்து நின்று

திரும்பிப் பார்த்தது!

ஒன்றைத் தாக்க பாய்ந்த போது

நான்கு பசுக்களும் - சிங்கத்தை

ஒன்றாய்ச் சேர்ந்து முட்டித் தள்ளி

தூர எறிந்தது!

பாய்ந்து வந்த சிங்க ராஜா

பயத்தில் நடுங்கியே - உடல்

ஓய்ந்த நிலையில் காட்டின் உள்ளே

ஓடி மறைந்தது!

ஒற்றுமைதான் உலகைக் காக்கும்

என்ற தத்துவம் - இதை

உணர்ந்து மக்கள் வாழ்ந்து விட்டால்

ஓங்கும் நம் பலம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com