நல்லதும் கெட்டதும்!
வெளியூரிலிருந்து அந்த நகரத்திற்குள் நுழையும் மனிதர்கள் அடிக்கடி முதியவரிடம் ஒரு கேள்வியைக் கேட்பர்!


ஒரு நகரத்தின் எல்லையோரத்தில் வயது முதிர்ந்த ஒருவர் அமர்ந்திருப்பார்!
வெளியூரிலிருந்து அந்த நகரத்திற்குள் நுழையும் மனிதர்கள் அடிக்கடி முதியவரிடம் ஒரு கேள்வியைக் கேட்பர்!
அதாவது ""இந்த நகரத்தில் வசிக்கும் மக்கள் நல்லவர்களா? கெட்டவர்களா?'' என்று.
வெளியூர்க்காரர்கள் கேட்கும் கேள்விக்குப் பதிலாக அந்த முதியவரும் ஒரு கேள்வியைக் கேட்பார்!
அதாவது, ""தற்போது நீங்கள் எந்த ஊரிலிருந்து வருகிறீர்களோ, அந்த ஊரிலுள்ள மக்கள் நல்லவர்களா? கெட்டவர்களா?'' என்பதுதான் அந்த முதியவர் கேட்கும் கேள்வி!
சிலர் முதியவரிடம் ""ஐயோ, அந்த ஊரிலுள்ள மக்கள் மிகவும் கெட்டவர்கள்!'' என்று சொல்வார்கள். உடனே முதியவரும் ""அப்படியா? இந்த ஊரிலுள்ள மக்களும் கூட கெட்டவர்கள்தான்! என்று பதில் சொன்னார்.
இன்னும் சில வெளியூர்காரர்களோ, ""ஐயா, எங்கள் ஊரிலுள்ள மக்கள் மிகவும் நல்லவர்கள்!'' என்று சொல்வார்கள்.
அதைக் கேட்கும் முதியவரும், ""அப்படியா? மகிழ்ச்சி! இந்த ஊரிலும் அதுபோலவே நல்ல மக்கள் வசிக்கிறார்கள். தாராளமாக உள்ளே செல்லுங்கள்.'' என்று சொல்லி ஊருக்குள் அனுப்பி வைப்பார்.
முதியவரின் நண்பர்களுக்கு இது வியப்பாக இருந்தது. அவர்கள் முதியவரிடம், ""ஏன் இப்படி பதில் கூறுகிறீர்கள்?'' எனக் கேட்டனர்.
அதற்கு முதியவர், ""நம் பார்வை நல்லதாக இருப்பின் நாம் பார்க்கும் அனைத்துமே நல்லதாகத்தானே இருக்கும்!'' என பதிலளித்தார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...