சிறுவன்:
ஏனோ? தேர்வே வருகின்றாய்!
எனக்கே பயமும் தருகின்றாய்
நானோ உன்னால் துடிக்கின்றேன்
இரவும் பகலும் படிக்கின்றேன்.
எனக்கோ இங்கிலீஷ் புரியாது!
இன்பத் தமிழும் தெரியாது
கணக்கோ வரலாறு அறிவியலோ
கரைத்துக் குடித்தும் செரிக்காது!
எனவே தேர்வே! உன்வரவால்
எனக்கு ஜுரமும் அடிக்கிறது!
மனமே பயந்து நடுங்கிறது!
மண்டைக் குடைச்சல் வலிக்கிறது.
தேர்வு:
தம்பி! தம்பி! சிறுதம்பி
தயக்கம் வேண்டாம்! படி! தம்பி!
நம்பிக்கைதான் வெற்றியினை
நல்கும் கவலை விடு! தம்பி
தேர்வு என்றால் பயம்கொண்டே
சிலபேர் தோல்வி அடைகின்றார்
ஆர்வம் கொண்டே படி! தம்பி!
அடைவோம்! வெற்றி என நம்பி!
உன்னை மேலும் உயர்த்தத்தான்
ஒவ்வோர் ஆண்டும் நான்வருவேன்
அன்னை தந்தை படித்தேதான்
அடைவோம்! வெற்றி என நம்பி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈஸ்டர் திருநாள்: குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழா தொடக்கம்!
கவலையை மறக்க...
விசில் சின்னத்துக்கு வாக்களிக்க மக்கள் தயார்: என். ஆனந்த் நம்பிக்கை
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

