

பேகன் என்னும் நல்லரசன்
பிள்ளை நெஞ்சம் கொண்டவனாம்
மேக மழைபோல் மக்களுக்கு
மிகவும் நன்மைகள் செய்பவனாம்
ஒருநாள் வேட்டை ஆடிவிட்டு
ஊரை நோக்கி வரலானான்
வரும்போ தவனோ நின்றிட்டான்
வந்த வழியில் ஓரிடத்தில்
ஒடிந்து விழுந்த மரத்தடியில்
ஓங்கி வீசும் குளிர்காற்றில்
நடுங்கிக் கொண்டு நின்றதுவாம்
நல்ல தோகை மயிலொன்று
மழையில் நனைந்து விட்டதனால்
மயிலின் நடுக்கம் குறையவில்லை
இழைத்த தனது போர்வையினை
எடுத்து மயில்மேல் போர்த்திட்டான்
எல்லா உயிர்க்கும் உடலொன்றே
இல்லை வேறு பாடெதற்கும்
எல்லா உயிர்க்கும் துயரொன்றே
இல்லை வேறு பாடெதற்கும்
என்றே பேகன் நினைத்திட்டான்
இருந்தான் காவல் நெடுநேரம்
நன்றே மயிலும் பிழைத்திடவே
நல்ல விருப்பம் கொண்டானாம்
மயிலும் கண்ணைத் திறந்ததடா
மன்னன் பேகனைப் பார்த்ததடா
மயிலின் பார்வை நன்றியடா
மன்ன னுக்குச் சொன்னதடா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.