புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கதைப்பாடல்:  பயிற்சியும் முயற்சியும்

மண்ணில் புதையும் விதைக்குள்ளேமறைந்தே யிருக்கும் பெரிய மரம்!

News image
Updated On :20 ஜூன் 2016, 2:47 am

நா. இராதாகிருட்டிணன்

மண்ணில் புதையும் விதைக்குள்ளே

மறைந்தே யிருக்கும் பெரிய மரம்!

தண்ணீர் தந்திடும் மின்சாரம்

தெரிவது இல்லை கண்களுக்கு!

கல்லுக் குள்ளே சிற்பமுண்டு

கல்லும் அதனை அறிவதில்லை!

நெல்லுக் குள்ளே நல்லரிசி

நெல்லுக் கென்றும் தெரிவதில்லை!

ஆழ் கடல் அதனில் முத்துண்டு

அலை கடல் அதனை அறிவதுண்டா?

ஆழ்ந்து கிடக்கும் ஆற்றல்கள்

அவரவர் அறிய முடிவதில்லை!

கற்கும் மாணவர் மனங்களுக்குள்

காண முடியாது ஒளிந்திருக்கும்

பற்பல ஆற்றலை அறிவதற்குப்

பயிற்சியும் முயற்சியும் துணையாகும்!

விளக்கும் குடத்துள் இருந்திட்டால்

வெளிச்சம் வெளியே தெரிவதில்லை!

ஒளியைத் தந்திடும் சூரியன்தான்

ஓட்டிடும் இருளை அறிவோமே!

பயிற்றிடும் ஆசான் துணையோடு

பயிற்சியும் முயற்சியும் இருந்திட்டால்

உயர்ந்த ஆற்றல் வெளிப்படுமே

உலகம் அதனால் பயன்பெறுமே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.