

1. பழுப்பு நிறத்தில் கடினமான ஒரு சுவர். அதற்கப்பால் ஒரு வெண் சுவர்.. அப்புறம் பார்த்தால் இனிப்புக் குளம்... இது என்ன?
2. பகலில் இருபுறமும் இரவில் நடுவிலும் இருக்கும். அது என்ன?
3. எத்தனை முறை வெட்டினாலும் இரண்டாகப் பிளக்க முடியாது...
4. இளமையில் கொம்பன், வளர்ந்த பிறகு கொம்பு இல்லாதவன்...
5. நீரிலும் வாழும் நிலத்திலும் வாழும், தவளையல்ல... கொம்பு இரண்டு வைத்திருப்பான்... யார் இவன்?
6. ஆளைக் கண்டால் தன்னுடைய தலையை தானே விழுங்குவான்... யார் இவன்?
7. புல் புதருக்கு நடுவே பாய்ந்தோடுது குட்டிப் படகு...
8. கண்ணுக்குத் தெரியாதவன், காலமெல்லாம் இருப்பவன்...
9. நிலமோ வெள்ளை நிறம், விதையோ கருப்பு நிறம்...
விடைகள்:
1. தேங்காய்
2. கதவு
3. தண்ணீர்
4. நிலவு
5. நத்தை
6. ஆமை
7. நெசவு நாடா
8. காற்று
9. தாள், மை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.