
ஒழுக்கம்
• ஒழுக்கம் உனக்கு நீயே போடும் நல்ல பாதை!
- பெர்னார்ட் ஷா
• ஒழுக்கத்தின் வெகுமதி மரியாதை.
- சிசரோ
• ஒழுக்கம் பிச்சைக்கார வடிவத்தில் இருந்தாலும் அதற்கு உரிய மரியாதை அளிக்கப்படும்.
- பீச்சர்
• ஒழுக்கத்தைப் பற்றிய சிந்தனை இல்லாதவன் எல்லா காரியங்களிலும் ஏமாற்றமடைவான்.
- டால்ஸ்டாய்
• ஒழுக்கம் என்ற வாயிலைக் கடந்துதான் கவுரவம் என்ற கோயிலுக்குப் போக முடியும்.
- காஸ்ட்ரோ
• ஒழுக்கமுள்ள மனிதன் பெருந்தன்மையும் மரியாதையும் உள்ள சொற்களையே பேசுவான்.
- ஜேம்ஸ் ஆலன்
• ஒழுக்கம் என்னும் அஸ்திவாரத்தின் மீதுதான் இன்பம் என்னும் மாளிகை
அமைக்கவேண்டும்.
- செஸ்டர் ஃபீல்ட்
• ஒழுக்க நெறி கந்தலாடை உடுத்தியவனுக்கும், பட்டாடை உடுத்தியவனுக்கும்
ஒரே மாதிரியானதுதான்.
- டிக்கன்ஸ்
• ஒழுக்கம், பண்பாடு, என்பது உடலிலும், உடையிலும் இல்லை. அது உள்ளத்தோடு ஒன்றி ஆத்ம வளர்ச்சியைக் காட்டும் பொருள்.
- சாமர்செட் மாம்
• ஒழுக்கம் மேன்மையைத் தருவதால் அது உயிரைவிட முக்கியம்.
- திருவள்ளுவர்
தொகுப்பு: முக்கிமலை நஞ்சன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.