பாதுகாப்புடன் பட்டாசு வெடிங்க குழந்தைகளே...

பட்டாசு வெடிக்கும்முன்பு... ஒரு இரும்பு வாளியில் தண்ணீர் பிடித்து அருகில் வைத்துக்கொள்ளுங்கள்... எரிந்து முடிந்த கம்பி மத்தாப்பு, பென்சில், சாட்டை போன்றவற்றை அந்த வாளியில் போட்டுவிடலாம்.
பாதுகாப்புடன் பட்டாசு வெடிங்க குழந்தைகளே...

பட்டாசு வெடிக்கும்முன்பு... ஒரு இரும்பு வாளியில் தண்ணீர் பிடித்து அருகில் வைத்துக்கொள்ளுங்கள்... எரிந்து முடிந்த கம்பி மத்தாப்பு, பென்சில், சாட்டை போன்றவற்றை அந்த வாளியில் போட்டுவிடலாம்.

 
ஒரு கம்பளிப் போர்வையை தயாராக வைத்துக்கொள்ளவேண்டும். எதிர்பாராத விதமாக உடையில் தீப்பிடித்துக்கொண்டால் கம்பளிப்போர்வையால் போர்த்தி அணைத்துவிடலாம்.
 
எளிதில் தீப்பற்றாத பாதுகாப்பான கெட்டியான பருத்தி ஆடைகள் அணிந்து பட்டாசு வெடிப்பது நல்லது.
 
காலில் செருப்பு அணிந்துதான் பட்டாசு வெடிக்கவேண்டும். கீழே கிடக்கும் எரிந்த பட்டாசு நெருப்புகள் பாதங்களைச் சுடாதவாறு செருப்பு நம்மை பாதுகாக்கும்.
 
பட்டாசுகளின் உறையின்மேல் பட்டாசு வெடிப்பதற்கான விதிமுறைகள் எழுதியிருக்கும்; அவற்றைப் படித்துப் பார்த்து பின்பற்றவேண்டும்.
 
சத்தம் அதிகமாக கேட்கும் வெடிகள், ராக்கெட் போன்றவற்றைத் திறந்தவெளி மைதானத்திற்கு எடுத்துச்சென்று வெடிக்கவும்.
 
சில வெடிகள் சீறிப் பறக்கும்... அவை வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே புகுவதைத் தடுக்க, ஜன்னல் கதவுகளை மூடிவைப்பது நல்லது.
 
பெட்ரோல் நிரப்பிய கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் அருகே பட்டாசுகளை வெடிக்கவேண்டாம்.
 
பட்டாசு வெடிக்கும்போது, அதன் தீப்பொறிகள் மற்ற பட்டாகளின்மேல் படாதவாறு பட்டாசு டப்பாக்களை மூடி வைக்க வேண்டும்...
 
ஒவ்வொரு பட்டாசாக எடுத்து வெடிக்க வேண்டும். பேண்ட் மற்றும் சட்டை பாக்கெட்டுகளில் பட்டாசுகளை திணித்து வைத்துக்கொண்டு வெடிக்கப் போகவேண்டாம்.
 
தெருவில் மரங்கள், மின்சாரக் கம்பிகள், ஒயர்கள் இருக்கும் இடத்தில் வாண வேடிக்கைகள் வேண்டாம்.. இதன்மூலம், மின் விபத்துகளையும், திசை மாறிச் செல்லும் நெருப்புச்சீற்றங்களால் ஏற்படும் விபத்துகளையும் தவிர்க்கலாம்.
 
எரியும் விளக்கு, மெழுகுவர்த்தி, ஊதுபத்தி போன்றவற்றை பட்டாசுகளுக்கு அருகே வைக்கவேண்டாம்.
 
சரவெடிகள் மற்றும் பறக்கும் பட்டாசுகளை சுமார் மூன்று அடி தூரம் தள்ளிநின்று கொளுத்தவும்.
 
முகத்துக்கு அருகில் பட்டாசுகளை வைத்து விளையாடுதல் வேண்டாம்.
 
வெடிக்காத பட்டாசுகளை உரித்து, அதிலிருக்கும் வெடிமருந்தைச் சேகரித்து, நீங்களாக ஒரு பட்டாசை தயாரிக்கவேண்டாம்; வெடிமருந்து துகள்கள் உங்கள் விரல்களில் ஒட்டிக்கொண்டு உபாதை ஏற்படுத்தும்.
 
பட்டாசை வெடிக்கத் தெரியாத குழந்தைகளின் கைகளில் பட்டாசைக் கொடுத்து விளையாட்டு காட்டவேண்டாம்.
 
பட்டாசுக்கு நெருப்பு வைத்து, வெடிக்கத் தாமதமாகும்போது அருகில் சென்று பார்க்கவேண்டாம். சில பட்டாசுகள் தாமதமாகவும் வெடிக்கும்.
 
சிறுவர்கள் எல்லோரும் பெரியவர்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு பட்டாசு வெடித்து மகிழுங்கள்.
 
கையில் வைத்துக்கொண்டு வெடித்தல், கொளுத்தி தூக்கிப் போடுதல் போன்ற வீர,பராக்கிரம விளையாட்டுச் செயல்கள் தவிர்க்கப்படவேண்டியவை. வெடி மருந்துக்கு வெடிக்கத்தானே தெரியும்; அதற்குத் துளிகூட நம்மீது கருணை காட்டத் தெரியாதே... நம்மை சேதப்படுத்திக்கொள்ளாமல் மகிழ்ச்சியைக் காணுங்கள்...!

நன்றி.... வணக்கம்...!

அனைவருக்கும் எங்கள் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..!''

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com