அங்கிள் ஆன்டென்னா

நூடுல்ஸை தமிழில் "குழைமா' என்று குறிப்பிடுகிறார்கள். சிறுவர்-சிறுமியர்க்கு மிகவும் பிடித்தமான
அங்கிள் ஆன்டென்னா
Published on
Updated on
1 min read

கேள்வி: சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமான நூடுல்ஸ் உணவின் வரலாறு பற்றிச் சொல்லுங்களேன்...

பதில்: நூடுல்ஸை தமிழில் "குழைமா' என்று குறிப்பிடுகிறார்கள். சிறுவர்-சிறுமியர்க்கு மிகவும் பிடித்தமான இந்த நூடுல்ஸின் வரலாறு குறித்து சில சந்தேகங்கள் உள்ளன. இருந்தாலும் சீனாவில்தான் முதலில் இந்த நூடுல்ஸ் உணவு வழக்கத்தில் இருந்தது என்கிறார்கள். பண்டைய சீனாவை நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி செய்த ஜியா வம்சத்தினரின் முக்கிய உணவாக நூடுல்ஸ் இருந்ததாம். சீனாவின் புத்தத் துறவி மூலம் ஜப்பானுக்குப் பரவியது என்றும் ஒரு கருத்து உள்ளது. 

சீன தொல்பொருள் ஆய்வுக்குழுவினர் 2005ஆம் ஆண்டு நடத்திய ஓர் ஆய்வில் தினை மாவினால் செய்யப்பட்ட நூடுல்ஸ் அடங்கிய பழங்கால மண்பாண்டத்தைக் கண்டுபிடித்தனர். கி.மு.220 இல் டாங் வம்சம் ஆண்டபோது உலர்ந்த நூடுல்ஸ் உருவாக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால், ஜப்பானைச் சேர்ந்த மோமோஃபுக்கு ஆன்ட்டோ என்பவர்தான் தற்போது நாம் சாப்பிடும் உடனடி நூடுல்ûஸ 1958இல் கண்டுபிடித்தார் என்று கூறப்படுகிறது. 
கி.பி.17ஆம் நூற்றாண்டில் நெதர்லாந்தில் வாழ்ந்த பிரபல ஓவியர் ஜான்வெர்மீர் வான்உட்ரெச்ட் வரைந்த ஓவியங்களில் ஓர் இளைஞன் நூடுல்ஸ் சாப்பிடும் காட்சி உள்ளது. இதன்மூலம் ஐரோப்பிய நாடுகளில் அப்போதே நூடுல்ஸ் இருந்திருப்பதை நாம் அறியமுடிகிறது. 

தைவானில் நூடுல்ஸ் தயாரிப்பு பிரசித்தி பெற்றதாகும். நம் ஊரில் தறியில் புடவை நெய்வதற்கு முன்பு பாவு இழைகளை இருபுறமும் இழுத்துக் கட்டிவைப்பார்கள் அல்லவா? அதேபோன்று தைவானில் நூடுல்ஸ் இழைகளை நான்கு புடவை நீளம் அளவுக்கு நீளம்... நீ....ளமாக கட்டி வைத்து நூடுல்ஸ் பிரியர்களைக் கவர்ந்திழுக்கிறார்கள்.  

நமது பாரம்பரிய உணவான இடியாப்பத்தை வெளிநாட்டினர் "இந்தியன் ரைஸ்
நூடுல்ஸ்' என்று அழைக்கிறார்கள். 

அடுத்த வாரக் கேள்வி
விக்கல், தும்மல், கொட்டாவி இவை எதனால் வருகிறது? இதை நிறுத்த என்ன செய்யலாம்?

பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம் நல்ல பதில் கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com