
ஒரு காடு. அதில் ஓர் ஓநாய் இருந்தது. அது சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அப்போது அதன் தொண்டையில் ஒரு எலும்பு சிக்கிக்கொணடது! ஓநாயால் அதைத் துப்பவும் முடியவில்லை....,முழுங்கவும் முடியவில்லை! மிகவும் அவதிக்கு உள்ளாகியது!
அப்போது அந்த வழியாக ஒரு கொக்கு வந்தது. ஓநாய் அதை அழைத்து,"கொக்காரே, என் தொண்டையில் ஒரு எலும்பு சிக்கிக் கொண்டு விட்டது. பெரிய அவஸ்தையாக இருக்கிறது...,உனக்கோ நீளமான அலகு இருக்கிறது. அதைக் கொண்டு கொஞ்சம் தயவு பண்ணி அதை எடுத்து விடேன். இதைச் செய்தால் நான் உனக்கு நல்ல பரிசு தருவேன்''
கொக்கும் ஓநாயின் வாயில் அலகுடன் தன் கழுத்தை நுழைத்தது! சாமர்த்தியமாக எலும்புத் துண்டையும் எடுத்து விட்டது!
"நீ எனக்குக் கொடுப்பதாகச் சொன்ன நல்ல பரிசு என்னவோ....அதை எனக்குக் கொடு'' என்றது கொக்கு.
"நீ அலகுடன் கூடிய உன் கழுத்தை என் வாய்க்குள் விட்டபோது நான் உன்னைக் கடிக்காமல் விட்டேனே....,அதுவே உனக்கு நான் தந்த பரிசு!''என்று கிண்டலாகக் கூறியது ஓநாய்!
பாவம் கொக்கு. தலைதப்பியதே போதும் என்று நினைத்துக்கொண்டு பறந்து சென்றது.
-முக்கிமலை நஞ்சன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.