கிறிஸ்துமஸ் பேபி!

கிறிஸ்துமஸ் பண்டிகை அதிகாலை கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை முடிந்ததும் ஜெனிட்டாவின் பெற்றோர் கோவிலுககுள் அமைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் குடிலை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
கிறிஸ்துமஸ் பேபி!

கிறிஸ்துமஸ் பண்டிகை அதிகாலை கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை முடிந்ததும் ஜெனிட்டாவின் பெற்றோர் கோவிலுககுள் அமைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் குடிலை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஜெனிட்டா ஆலயத்தை விட்டு வெளியே வளாகத்திற்கு வந்து திரும்பியபோது ஜெனிட்டாவின் கைகளில் ஒரு அழகான கைக்குழந்தை. மார்கழிக் குளிரை தாங்கிட வெள்ளை நிற ஸ்வெட்டரும், வெள்ளை நிறத்தில் குல்லாவும் போடப்பட்டிருந்த அந்தக் குழந்தை பார்ப்பதற்கு குட்டி தேவதை போல க்யூட்டாக இருந்தது. 
""ஜெனிட்டா!...யார் இந்தக் குட்டி தேவதை?'' என்று பெற்றோர்கள் கேட்டனர். 
""கிறிஸ்துமஸ் பேபி!'' என்றாள் ஜெனிட்டா.
அழகான அந்தக் குழந்தையை வாங்கி, ஜெனிட்டாவின் அம்மா ஜெனிஃபரும், அப்பா ஜெய்சனும் கொஞ்சி மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். 
""இந்த கிறிஸ்துமஸ் பேபி யாருடைய பேபி?'' ஜெனிட்டாவின் பெற்றோர்கள் கேட்டனர். 
""என் குட்டித் தங்கை!...'' என்றாள் ஜெனிட்டா.
ஜெனிட்டா என்ன சொல்கிறாள்...என புரியாமல் இருவரும் விழித்துக் கொண்டிருந்தார்கள்! அப்போது அவர்களை நோக்கி ஜெனிட்டாவின் சித்தப்பாவும், சித்தியும் ""ஹேப்பி கிறிஸ்துமஸ்!'' என்று சொல்லி வணங்கிக்கொண்டே வந்தார்கள். 
கிறிஸ்துமஸ் பேபி தனது தம்பியின் குழந்தை என்பதை ஜெனிட்டாவின் பெற்றோர் புரிந்துகொண்டார்கள். சொத்துப் பிரச்னையால் பல வருடம் ஒருவருக்கு ஒருவர் பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்தார்கள்.
அவர்களைப் பேச வைக்க தன் சித்தப்பா, சித்தியிடம் சென்றாள் ஜெனிட்டா. அவர்களிடம் ஜெனிட்டா, ""குட்டிப்பாப்பாவை கொஞ்சி மகிழ அம்மாவும், அப்பாவும் வாங்கி வரச் சொன்னார்கள்!'' என்று ஒரே ஒரு பொய்யைச் சொல்லி வாங்கி வந்தாள். 
அதை உண்மை என்று நம்பி அவளுடைய சித்தப்பாவும், சித்தியும் குழந்தையை ஜெனிட்டாவிடம் தந்து விட்டனர். குழந்தையைக் கொஞ்சி மகிழ்ந்தனர் ஜெனிட்டாவின் பெற்றோர்!அதைப்பார்த்த சித்தப்பாவும், சித்தியும் மனம் நெகிழ்ந்தனர். அவர்களுடன் சமாதானமும் ஆகிவிட்டார்கள். பொய்யே சொல்லாத ஜெனிடடா சகோதரர்களுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்த ஒரே ஒரு பொய்யைச் சொல்லிவிட்டாள்! அதற்காக இயேசு சாமியிடம் மன்னிப்பும் கேட்டாள்! பெற்றோர்களின் கைகளில் கிறிஸ்துமஸ் பேபி பூவாய்ச் சிரித்தது. கன்னத்தில் மாறி,மாறி முத்தம் கொடுத்து மகிழ்ந்தனர். 
கோயில் கோபுரத்தில் "அன்பே பிரதானம் சகோதர அன்பே பிரதானம்!' என கிறிஸ்துமஸ் பாடல் குளிர்ந்த காற்று வழியே மிதந்து வந்து கொண்டிருந்தது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com