வள்ளலார் பொன்மொழிகள்

அன்பும் இரக்கமுமே வாழ்க்கையின் அடிப்படை.  உண்மையைச் சொல், அது உனது வார்த்தைகளைப் பாதுகாக்கும்.
வள்ளலார் பொன்மொழிகள்
Published on
Updated on
1 min read

* சினம், சோம்பல், பொய், பொறாமை, கடுஞ்சொல் முதலியவைகளை அறவே நீக்க வேண்டும்.

* அன்பும் இரக்கமுமே வாழ்க்கையின் அடிப்படை.  உண்மையைச் சொல், அது உனது வார்த்தைகளைப் பாதுகாக்கும்.

* யாரிடத்தில் தயவு அதிகம் இருக்கிறதோ அவரிடத்தில் கடவுள் இருக்கிறார்.

* எனக்குச் சித்திகள் எல்லாம் தருகின்ற தெய்வமாக விளங்குவது சத்தியமே.

* எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் பாவித்து சம உரிமை வழங்குவோரின் மனதில்தான் இறைவன் வாழ்கிறான்.

* ஏதும் இல்லாத ஏழைகளுக்கு இரக்கப்பட்டு மனது உவந்து ஈவதே ஜீவகாருண்யம்.

* வாக்கு வேறு, மனம் வேறு, செய்கை வேறு என்கிற நிலையில் இறைவனை வழிபடாதீர்கள். மூன்றும் ஒன்றிய நிலையில் வழிபடுங்கள்.

ஆர்.மீனாட்சி, திருநெல்வேலி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com